போராடி பார்த்துவிடு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.05.2024

ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத் தான் சாகிறது.

ஒரு மீனைத் தூக்கித் தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டிப் பார்த்து விடுகிறது.

மனிதர்கள் நமக்கு என்ன நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் உயிர் இருக்கிறதா தெளிவான சிந்தனை இருக்கிறதா அது போதும்.

எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்து விடலாம்.
                                                  
ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்து விட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத் தான்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க
                   


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி