இளைஞர்களுக்கான அரசியல் பங்கேற்பு -"இந்திய மக்களாகிய நாம்" கருத்தரங்கு! | Veritas Tamil

சென்னை சாந்தோமில் மக்களாட்சி, நீதி, பொறுப்பான குடியுரிமை என்பன குறித்து நடைபெற்ற அமர்வுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
“இந்திய மக்களாகிய நாம்” எனும் தலைப்பில் நடைபெற்ற உற்சாகமிக்க கருத்தரங்கம், சனிக்கிழமை சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் அருள்பணி மையத்தில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒன்றிணைத்தது. உயர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு, Christ Focus மற்றும் Catholic Professional Forum ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்திய இந்த ஒருநாள் நிகழ்ச்சி, இந்திய அரசியல் அமைப்பின் மதிப்புகள் மற்றும் பார்வையை இளைஞருக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இழைஞர்களுக்கான அரசியல் பங்கேற்பு  இந்திய மக்களாகிய நாம் கருத்தரங்கு  சென்னை சாந்தோமில் மக்களாட்சி, நீதி, பொறுப்பான குடியுரிமை என்பன குறித்து நடைபெற்ற அமர்வுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “இந்திய மக்களாகிய நாம்” எனும் தலைப்பில் நடைபெற்ற உற்சாகமிக்க கருத்தரங்கம், சனிக்கிழமை சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் அருள்பணி மையத்தில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒன்றிணைத்தது. உயர் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு, Christ Focus மற்றும் Catholic Professional Forum ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்திய இந்த ஒருநாள் நிகழ்ச்சி, இந்திய அரசியல் அமைப்பின் மதிப்புகள் மற்றும் பார்வையை இளைஞருக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.  இக்கருத்தரங்கம் இளைஞர்களில் குடிமக்களுக்கான உணர்வை மேம்படுத்தி, தங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்வதுடன், மக்களாட்சி, சமத்துவம் மற்றும் நீதியின் கோட்பாடுகளை தாங்கள் நாளந்தோறும் வாழ்க்கையில் பின்பற்ற ஊக்குவித்தது.  அரசியல் அமைப்பின் ஆன்மா– ஒரு ஆய்வு  பாட்ரிஷியன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் பாத்திமா வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வு “இந்திய அரசியல் அமைப்பை இளைஞர்களுக்கு உணர்த்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அவர் அரசியல் அமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் அல்ல, இந்தியாவின் நெறி மற்றும் சமூக மனச்சாட்சியின் உயிர்ப்பான வெளிப்பாடு என்றும் வலியுறுத்தினார்.    அடிப்படை உரிமைகள் குறித்த பல உண்மை வழக்குகளின் உதாரணங்களின் மூலம், அவர் அரசியலமைப்பின் சரத்துக்கள் 14 (சமத்துவ உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம்), 21 (வாழ்வின் மற்றும் தனிநபரின் சுதந்திரத்தின் உரிமை) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினார். மனநலம், பொறுப்பான எண்மின் பயண்பாடு மற்றும் பாகுபாடு எதிர்ப்பு குறித்து அவர் பேசினார்; இளைஞர்கள் தங்கள் பேச்சு, சிந்தனை மற்றும் செயலில் அரசியல் அமைப்பின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.  ஜனநாயகத்தின் ஊக்கி – இளைஞர்கள்  இரண்டாம் அமர்வை செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியின் தலைவரான டாக்டர் வின்சென்ட் காமராஜ் அவர்கள் நடத்தினார். “இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை மதிப்புகளை முன்னேற்றும் ஊக்கிகளாக- இளைஞர்கள் ” எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.  அரசியல் அமைப்பின் தோற்றத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், அது ஒரு நீதி மற்றும் ஒருங

இக்கருத்தரங்கம் இளைஞர்களில் குடிமக்களுக்கான உணர்வை மேம்படுத்தி, தங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்வதுடன், மக்களாட்சி, சமத்துவம் மற்றும் நீதியின் கோட்பாடுகளை தாங்கள் நாளந்தோறும் வாழ்க்கையில் பின்பற்ற ஊக்குவித்தது.

அரசியல் அமைப்பின் ஆன்மா– ஒரு ஆய்வு

பாட்ரிஷியன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் பாத்திமா வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வு “இந்திய அரசியல் அமைப்பை இளைஞர்களுக்கு உணர்த்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அவர் அரசியல் அமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் அல்ல, இந்தியாவின் நெறி மற்றும் சமூக மனச்சாட்சியின் உயிர்ப்பான வெளிப்பாடு என்றும் வலியுறுத்தினார்.

அடிப்படை உரிமைகள் குறித்த பல உண்மை வழக்குகளின் உதாரணங்களின் மூலம், அவர் அரசியலமைப்பின் சரத்துக்கள் 14 (சமத்துவ உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம்), 21 (வாழ்வின் மற்றும் தனிநபரின் சுதந்திரத்தின் உரிமை) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினார். மனநலம், பொறுப்பான எண்மின் பயண்பாடு மற்றும் பாகுபாடு எதிர்ப்பு குறித்து அவர் பேசினார்; இளைஞர்கள் தங்கள் பேச்சு, சிந்தனை மற்றும் செயலில் அரசியல் அமைப்பின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

ஜனநாயகத்தின் ஊக்கி – இளைஞர்கள்

இரண்டாம் அமர்வை செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியின் தலைவரான டாக்டர் வின்சென்ட் காமராஜ் அவர்கள் நடத்தினார். “இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை மதிப்புகளை முன்னேற்றும் ஊக்கிகளாக- இளைஞர்கள் ” எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.

அரசியல் அமைப்பின் தோற்றத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், அது ஒரு நீதி மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான கூட்டுப் கனவிலிருந்து பிறந்தது என்று நினைவூட்டினார்.

அவர், சகோதரத்துவம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை இந்திய மக்களாட்சியின் இதயமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “நம்முடைய அரசியல் அமைப்பு பழைய நினைவுச் சின்னம் அல்ல,” என்று அவர் கூறினார். “அது நாம் எப்படி வாழ்கிறோம், பேசுகிறோம், ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கிறோம் என்பதற்கான வழிகாட்டி.”

இரு அமர்வுகளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கலந்துரையாடலுடன் முடிந்தன; இதில் சமூக ஊடக ஒழுக்கம் முதல் சமத்துவம் மற்றும் குடியுரிமை வரை பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

மறுபடியும் உறுதி செய்யப்பட்ட குடிமையுணர்வு

நாளின் முடிவில் பங்கேற்பாளர்கள், நீதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் அரசியல் அமைப்பின் கோட்பாடுகளை தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த உறுதியெடுத்தனர்.

“இந்திய மக்களாகிய நாம்” நிகழ்வு, இளைஞர்களுக்கு தங்கள் ஜனநாயக மற்றும் கருணையுள்ள சமூகத்தை வடிவமைப்பதில் தங்களின் பங்கினைக் கண்டறிய ஒரு அர்த்தமிக்க தளமாகத் திகழ்ந்தது – அது இந்தியாவின் நிறுவிய ஆவணத்தில் வெளிப்பட்ட இலட்சியங்களை இன்றும் பிரதிபலிக்கச் செய்கிறது.