மன்னார் சுற்றுச்சுழலை காக்கும் போராட்டம் 100வது நாளை எட்டியது!| Veritas Tamil

மன்னார் சுற்றுச்சுழலை  காக்கும் போராட்டம் 100வது நாளை எட்டியது
மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது.

மன்னார் சுற்றுச்சுழலை  காக்கும் போராட்டம் 100வது நாளை எட்டியது மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது. சில திட்டங்கள் நடைமுறையில் இருந்தும், சில முன்மொழியப்பட்டும் இருக்கும் நிலையில், அவை சுற்றுச்சுழலுக்கும் , உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிரமான கவலைகள் எழுந்துள்ளன. இலங்கையின் ஒரே கத்தோலிக்க பெரும்பான்மை மறைமாவட்டமான மன்னார் மறைமாவட்டம், நம்பிக்கையும் நெறிப்பொறுப்பும் கொண்ட இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, நவம்பர் 4 அன்று அரசு மக்கள் எதிர்ப்பை உருவாக்கிய புதிய காற்றாலை கட்டுமானங்களை நிறுத்துவதாக அறிவித்தது.  இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகள் கூட்டணியின் ஒழுங்குபடுத்துபர் இறைஅன்பர் மார்கஸ் தெரிவித்ததாவது: “மன்னார் தீவுப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுக்கு குடியரசுத் தலைவர் தலையிட்டதற்கு நன்றி. ஆனால் எங்கள் மீதமுள்ள மூன்று கோரிக்கைகளும் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,” என்றார். குடியரசுத் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கியக் கோரிக்கைகள்:  மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்தல்.  ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 36 காற்றாலை டர்பைன்களால் உருவாகியுள்ள சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுதல்.  மன்னார் தீவில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் எந்தவொரு வகையிலும் கனிம மணல் சுரங்கப்பணி நடைபெறுவதற்கு முழுமையான தடை விதித்தல்.  போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு, இக்கோரிக்கைகளை மையமாகக் கொண்டு ஒரு பெரிய பொது பேரணி நடைபெற உள்ளது. இத்திட்டங்களால் மன்னார் தீவின் மீன்வள வாழ்வாதாரம் பாதிப்பு, நிலக்கருகல், உயிரி பல்வகைமை இழப்பு உள்ளிட்ட பல சூழல் மற்றும் சமூகச் சவால்களை மக்கள் ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறார்கள். மன்னாரிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள், திருச்சபை மக்கள், பிற மதத்தினர்கள், சூழலியல் அமைப்புகள், குடியியல் சமூகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளூர் வாழ்வையும் சூழலையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் லவுடாத்தோ சீயின் ஆவியையும், ப


சில திட்டங்கள் நடைமுறையில் இருந்தும், சில முன்மொழியப்பட்டும் இருக்கும் நிலையில், அவை சுற்றுச்சுழலுக்கும் , உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிரமான கவலைகள் எழுந்துள்ளன.
இலங்கையின் ஒரே கத்தோலிக்க பெரும்பான்மை மறைமாவட்டமான மன்னார் மறைமாவட்டம், நம்பிக்கையும் நெறிப்பொறுப்பும் கொண்ட இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, நவம்பர் 4 அன்று அரசு மக்கள் எதிர்ப்பை உருவாக்கிய புதிய காற்றாலை கட்டுமானங்களை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகள் கூட்டணியின் ஒழுங்குபடுத்துபர் இறைஅன்பர் மார்கஸ் தெரிவித்ததாவது:
“மன்னார் தீவுப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுக்கு குடியரசுத் தலைவர் தலையிட்டதற்கு நன்றி. ஆனால் எங்கள் மீதமுள்ள மூன்று கோரிக்கைகளும் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,” என்றார்.
குடியரசுத் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கியக் கோரிக்கைகள்:

  • மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்தல்.
  • ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 36 காற்றாலை டர்பைன்களால் உருவாகியுள்ள சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுதல்.
  • மன்னார் தீவில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் எந்தவொரு வகையிலும் கனிம மணல் சுரங்கப்பணி நடைபெறுவதற்கு முழுமையான தடை விதித்தல்.

போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு, இக்கோரிக்கைகளை மையமாகக் கொண்டு ஒரு பெரிய பொது பேரணி நடைபெற உள்ளது.

இத்திட்டங்களால் மன்னார் தீவின் மீன்வள வாழ்வாதாரம் பாதிப்பு, நிலக்கருகல், உயிரி பல்வகைமை இழப்பு உள்ளிட்ட பல சூழல் மற்றும் சமூகச் சவால்களை மக்கள் ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறார்கள்.
மன்னாரிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள், திருச்சபை மக்கள், பிற மதத்தினர்கள், சூழலியல் அமைப்புகள், குடியியல் சமூகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளூர் வாழ்வையும் சூழலையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் லவுடாத்தோ சீயின் ஆவியையும், படைப்பைக் காக்கும் பணியும் மனிதரை காக்கும் பணியும் ஒன்றே என்கிற பாபா பிரான்சிஸின் அழைப்பையும் பிரதிபலிக்கிறது.