இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (ICYM) வெள்ளி விழா நிறைவு; | Veritas Tamil

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (ICYM)  வெள்ளி விழா நிறைவு; 

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (ICYM) ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்ட வெள்ளி விழாஅக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமைஅன்று, கேரள மாநிலம் முரிங்கூரில் உள்ள தியான மையத்தில் (Divine Retreat Centre)  இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (ICYM) வெள்ளி விழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவின்  திருப்பலியை இந்திய ஆயர்கள் மாநாட்டு (CCBI) மற்றும் ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பு (FABC) தலைவர் கார்டினல் பிலிப் நேரி பெர்ரோ (Cardinal Filipe Neri Ferrão) தலைமையில், 3,500 இளைஞர்கள் 200 அருட்தந்தையர்கள்  கலந்து கொண்டு மிகுந்த இறைபக்தியுடன் சிறப்பித்தனர் .

இந்த நிறைவு விழாவின் போது, CCBI இளைஞர் ஆணையத்தின் செயல் செயலாளர் ஃபா. சேதன் மச்சாடோ (Fr. Chetan Machado) அடுத்த தேசிய இளைஞர் மாநாடு 2026ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் என அறிவித்தார். இதை வரவேற்ற ஒடிசா மண்டல இளைஞர் இயக்க இயக்குநர் ஃபா. பிரகாஷ் கீரோ (Fr. Prakash Kiro), பிரதிநிதிகளை “ஒடிசா மண்ணிற்கு வருக” என அன்புடன் அழைத்தார்.

இந்த விழாவின்போது  மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்க்மா (Conrad Sangma) விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 
ஐந்து நாள் மாநாடு, CCBI இளைஞர் ஆணையத்தின் தலைமையில், இந்தியா முழுவதிலிருந்தும் வந்த இளைஞர்களை ஒன்று சேர்த்தது. இதில்  பங்கேற்ற இளைஞர்கள் இதை “வாழ்க்கையை மாற்றிய அனுபவம்” என விவரித்தனர்.

சத்தீஸ்கரில் இருந்து வந்த செல்வி அபூர்வா சேஸ் (Ms. Apoorva Xess) “இது ஆன்மீகமாக ஊட்டமளித்த அனுபவம். இந்த ஐந்து நாட்கள் எனக்கு ஒரு புதுப்பிப்பு தருணமாக இருந்தது. இது என் இதயத்தைத் தொட்டது; இயேசுவிற்கும் திருச்சபைக்கும் மேலும் பணியாற்ற ஊக்கமளித்தது,” என்று  கூறினார்

ஆந்திராவில் இருந்து வந்த திரு. கல்யாண் (Mr. Kalyan) கூறினார்: “சாட்சி மாநாடு மறக்க முடியாத தருணங்களால் நிறைந்த ஒரு சிறந்த நிகழ்வு. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து, பல மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் வந்த உயிரோட்டமிக்க இளைஞர்களுடன் இருந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது .உண்மையில் இது செழுமையான அனுபவமாக இருந்தது.”

வெள்ளி விழா நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கம்  (ICYM)  இப்போது 2026 ஒடிசா மாநாட்டை நோக்கி முனைந்துள்ளது. அங்கு மீண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர் தலைவர்கள் நம்பிக்கையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் மீண்டும் இணைவர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த விழா நிறைவுப்பெற்றது .

Daily Program

Livesteam thumbnail