பாரபட்சம் இல்லா இயற்கை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.10.2024
இயற்கை எப்போதும் பாரபட்சம் பார்ப்பதில்லை,
பூச்செடிக்கு தண்ணீரை பெரியவர்கள் ஊற்றினாலும் பூக்கும்,
குழந்தைகள் ஊற்றினாலும் பூக்கும்.
அதேபோல் கழுதை அழுக்கு துணியும் சுமக்கும்,
வெளுத்த துணியும் சுமக்கும்
ஆனால் ஆறாம் அறிவு பெற்ற சிறப்பு மிக்க மனிதனுக்கு மட்டும் ஏனோ
எல்லோரிடமும் பாரபட்சம் பார்க்கும் நிலை உள்ளது
பாரபட்சம் பார்ப்பது மனம்
பாரபட்சமற்ற முறையில் இருப்பது ஆன்ம உணர்வு என்ற அன்பின் வழி
மனதின் வழியில் வாழ்ந்தால் பாரபட்சமே பிறப்பெடுக்கும்
அன்பின் வழி வாழ்ந்தால் பாரபட்சம் பார்க்கும் உணர்வு நிலை மாறி
அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிட்டும்
இந்த பக்குவமே இயற்கையின் இயல்போடு இசைந்து வாழ வைக்கும்
இந்த இசைவான வாழ்வே யோக வாழ்வாகவும், ஞான வாழ்வாகும் தரம் மாற்றம் அடையும்
இந்த தரமாற்றமே தன்மாற்றம் உணர்வும் ஆகும்
தரமாற்றத்தின் தன்மாற்றத்தில்
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் உழைப்பும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி