“நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற துவாலுத் தீவு நாட்டு அதிபரின் உருக்கமான வேண்டுகோளுக்கு அச்சபையோர் செவிமடுக்கவில்லை. அது ஐநாவின் காலநிலை மாற்ற மாநாட்டுச் சபை. துவாலுத் தீவைப் போன்றே பூவுலகில் உள்ள அனைத்துக் குட்டித்தீவுகளும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் தீவுகள். இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல.
கடல் நீரோட்டங்கள் மற்றும் வானிலை போன்ற பெரிய அமைப்புகள் உண்மையில் பெரிய அளவீடுகளில் செயல்படுகின்றன. நீர்நிலை அறிவியல் துறையின் ஜானிஸ் பிரான்னியின் புதிய ஆராய்ச்சியின் படி, உங்கள் பிளாஸ்டிக் கழிவுகளும் அவ்வாறே உள்ளன.