வதந்தி தேவையா?

ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும்  இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது  பிறரோடு உரையாடுவதில்  ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ  இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது   அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி  .

ஆனால் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா, உங்களுக்குத் தெரியாத நபர்களைப் பற்றி விவாதிக்க உங்கள் பொன்னான நேரத்தை எவ்வளவு கொஞ்சம் அதிகமாகவே வீணாக்குகிறீர்கள் என்று.

உங்களிடம் கூடுதல் இரண்டு மணிநேரம் இருந்தால், நீங்கள் சீக்கிரம் தூங்குவீர்கள், அல்லது உங்கள் வேலையை முடித்திருப்பீர்கள், உங்கள் வீட்டு வேலைகளை  செய்திருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

ஆனால் என்ன பயன், இத அரட்டை  மிகவும் கவர்ச்சியூட்டுகிறது, எல்லா செய்திகளையும் நீங்கள் சரியாக பெற விரும்புகிறீர்கள் !! ஆனால் அது உங்கள் இலக்குகளை அடைவதைத் தடுக்கிறது,  நம்பவில்லையா ?? எப்படி மேலும் படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

1. வதந்திகள் நேர விரையம்:

 நம்மில் பலர் வதந்திகள் முக்கியம் என்று நினைக்கிறார்கள், அது எங்களுக்கு எல்லா செய்திகளையும் தருகிறது மேலும்  வதந்திகள் பரப்பாவிடில்  உலகத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்வோம் என்றும் நினைக்கிறார்கள்.

நடப்பது  என்னவென்றால், செய்திகள் என்று அழைக்கப்படுவதற்கு செய்தித்தாள்கள் உள்ளன, வேறு பல ஆதாரங்கள் உள்ளன, ஆனால் நாம்  வதந்திகளை தேர்வு செய்கிறோம்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பது, ஒருவரைப் பற்றிக் கூறுவது. அதற்கு பதிலாக நாம் என்ன பெறுகிறோம்? ஒன்றுமில்லை!

2. இது நம் குறைபாட்டை காட்டுகிறது:

ஒரு நபராக நாம் மற்றவர்களின் வாழ்க்கையை கிசுகிசுப்பது அல்லது விவாதிப்பது, அல்லது நான் இவாறாகவே செய்தேன் என்று சொல்லக்கூட இல்லாதவரிப்பற்றி நாம் தீர்ப்பளிக்கிறோம்.  இதில்  மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இங்கே நமக்கு அந்த பேசப்படும் நபரின் பெயரைத்தவிர ஒன்றும் தெரியாது.

3. தெரிந்தெடுக்கும் திறன்:

நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது என முக்கியமாக தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் ஆனால் இவ்வகையான உரையாடல்களில் நீங்கள் அமர்ந்திருக்கின்ற பொழுது எழுந்திருக்க விரும்பாமல் இருப்பீர்கள் அதேபோல ஒரு தலைப்பு உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதை காண்பீர்கள் அதை முடித்து விட்டு செல்லலாம் என்று எண்ணுவீர்கள் ஆனால் ஒரு தலைப்பு பிறப்புகளுக்கு இட்டுச் சென்று உங்கள் வேலையை செய்ய விடாமல் தடுத்து விடும் நீங்கள் அங்கேயே அமர்ந்து இருப்பீர்கள் எழுந்து செல்லவும் வாய்ப்பில்லாமல் இருந்துவிடும் உங்களுடைய முக்கியமான வேலையை பற்றி எல்லாம் நீங்கள் மறந்துவிட்டு இருப்பீர்கள் அதே நேரத்தில் நீங்கள் எவ்வளவு வேலைகளை செய்து இருக்கலாம் அது உங்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது

4. நீங்கள் முக்கியமான செய்தியை இழக்கிறீர்கள்:

இவ்வகையான அரட்டைகளில் நாம் நிறைய உண்மையான உலகச் செய்திகளை இழந்து விடுகின்றோம் உலகச் செய்திகள் மிகவும் முக்கியமானவை நடப்பு விவகாரங்கள் மிகவும் முக்கியமானவை பங்குசந்தை அரசியல் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அவை செயல்படுத்தப்படும் விதங்கள் போன்ற பல சுவாரஸ்யமான தலைப்புகள் இருக்கின்ற பொழுது நாம் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெறும் குப்பை கதைகளை பேசிக்கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

5.  நான் என்ன செய்யலாம்:

உலகம் முழுவதிலும் இந்த கிசுகிசுக்கும் அதை தடுக்க முடியாது ஆனால் நான் என்ன செய்யலாம் என்றால் எனக்கு முன் இருப்பவர்களை இந்த விஷயங்கள் பேசாமல் தடுக்க முடியும் இந்த விவாதத்தில் இருந்து விலகி இருக்க முடியும் ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் அவ்வாறு செய்வதில்லை அடுத்த முறை இவ்வாறான ஒரு விஷயம் இருக்கின்றது என்று சொல்கின்ற பொழுது அவற்றை அப்பொழுதே எனக்கு வேண்டாம் என்று நீங்கள் நிறுத்துங்கள் இதுவே மிகவும் சிறந்த செயல்

6. உங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை:

நீங்கள் முடிவில்லாமல் நிறைய மற்றவர்களைப்பற்றி தூக்கத்தை இழந்து உணவைக்கூட இழந்து பேசியிருக்கலாம் ஆனால் நீங்கள் எப்போதாவது யோசித்தீர்களா இந்த பேச்சுகளால் நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மாறாக நேரமும் சக்தியும் பணத்தையும் செலவு செய்து கேட்டவற்றை பரப்பிக்கொண்டு இருந்தோம் என்று

உரையாடல்களில் கலந்து கொள்வது நல்லது தான் சில நேரங்களில் அரட்டைகள் நல்லது தான் ஆனால் வரம்பு இருக்கவேண்டும் அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

7. மற்றவரைப் பற்றி எதிர்மறை எண்ணங்களை யே பெறுகிறோம்:

மற்றவரைப் பற்றி நாம் கேள்விப்படும் வதந்திகள் எப்போதுமே உண்மை அல்ல உண்மையில் அவை பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் பொய்யானவை மேலும் இவை நம்மை எதிர்மறையாய் நிரப்பி விடுகின்றன நமக்கு சரியாக தெரியாத நபர்களை பற்றி நாம் தவறான பிம்பத்தை உருவாக்கிக் கொள்கின்றோம்

அதேபோன்று மற்றவர்களைப் பற்றி நம்மிடம் பேசுகிறார்கள் நாம் இங்கு இல்லாமல் சென்று விட்டால் நம்மைப் பற்றி இவர்கள் பேசுவார்கள் என்ற தவறான எண்ணத்தையும் நாம் இங்கு உருவாக்கி கொண்டு இருக்கின்றோம்