ஆட்டிஸ்டிக் (மன இறுக்கம்) பெருமை நாள் | ஜீன் 18

ஆட்டிஸ்டிக் (மன இறுக்கம்) பெருமை நாள்
    

மன இறுக்கப் பெருமை நாள் முதன் முதலில் 2005 ஆம் அண்டு கொண்டாடப்பட்டது. மன இறுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இந்த சமூகத்திற்கு பல வகையில் வர்ணம் கொடுக்கிறார்கள். வானில்லைக் கொண்டுவருகிறார்கள். அவர்களும் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள் என்பதனை உணர்த்தவே அஸ்பிஸ் பார் ப்பிரிடம் என்ற அமைப்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. 
    மன இறுக்கம் (யுரவளைஅ) என்பது, குழந்தைகளிடத்தில்   காணப்படுகின்ற  ஒரு வகை மனநோயாகும். மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். உதாரணமாக அவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். பெரும்பாலும் ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய்  பாதிக்கிறது. ஆட்டிஸ்டிக் குழந்தைகள் சாதாரண குழந்தைகளை காட்டிலும் பெரிதும் வேறுபட்டு இருக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 110 குழந்தைகளில் ஒரு குழந்தை மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகிறது  என்று சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகம் (ஆinளைவசல ழக ளழஉயைட தரளவiஉந யனெ நஅpழறநசஅநவெ) தெரிவிக்கின்றது. இந்த நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகமாக பாதிக்கின்றது. 
    பிறவியிலேயே மன இறுக்கத்தைக் கண்டறிய இயலாது. எனினும், குழந்தைகள் வளர வளர மன இறுக்கத்தின் அறிகுறிகளை பெற்றோர்கள் படிப்படியாக கவனிக்கின்றனர்.
மன இறுக்கம் என்பது குழந்தைகளின் இயல்புநிலையை பாதிக்கும் ஓர் வளர்ச்சி தொடர்பான கோளாறாகும், இது குழந்தைகளின் சமூக தொடர்பு (ளழஉயைட iவெநசயஉவழைn) மற்றும் நடத்தை போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.