மோன் பிலோமினா எமாமோடோ - Mon Filonena Yamamoto - October 18, 2019

ஜப்பானிய சேவியரின் மரியாயின் மறைப்பணி என்ற சபையில் அருட் சகோதரியாக 83 ஆவது வயதில் 2014 ஏப்ரல் 28ல் மியாசாகி என்னுமிடத்தில் மரித்தார். இவருடைய வாழ்க்கை வரலாறு அவரே கைப்பட எழுதியதை  நாம் காணலாம். "நான் வளர்ந்த சூழல்களை பார்க்கின்ற பொழுதும் திருமுழுக்கின் ஆசீர்வாதத்திற்கு முன்னேறிய பொழுதும் நான் இறைவனுடைய அமைதியான மறைவான வழிநடத்துதல் காணுகின்றேன்.

நான் ஒரு புத்த குடும்பத்தில் பிறந்தவர். என்னுடைய வீட்டிலே எம்முடைய மூதாதையரின் நினைவுகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தினந்தோறும் வணங்குவதும் தேநீரும், உணவும் படையல் இடுவதும் வழக்கம். திருப்பயணிகள் மற்றும் ஏழை மக்கள் வருகின்ற பொழுது அவர்களுக்கு நாங்கள் உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தோம்.

எங்களுக்கும் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறுவயது முதலே நான் கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கே துறவிகளின் பேச்சையும் சொற்பொழிவையும் கேட்பது வழக்கம். எனக்குள்ளாக சில கேள்விகள் எழுந்தன. மக்கள் ஏன் பிறந்து, இறக்கிறார்கள்? ஏன் துன்பங்களும் இந்த உலகில் இருக்கின்றன?

நல்லது செய்வோர் துன்பப்படுவதும் தீயோர் நன்றாக வாழ்வதும் ஏன்? இந்த கேள்விகள் அடிக்கடி என்னுள் எழுந்தாலும், இதை பெரியவர்களிடம் நான் கேட்டதே இல்லை. ஏனென்றால் அவர்கள் இதற்கு விடை அளிக்க இயலாமல் போகும் என்ற எண்ணத்தோடு" என்கிறார்.

"இயற்கை அதனுடைய பருவ நிலைகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் வழியாக கடவுள் என்னோடு பேசுகிறார் என்பது என் நம்பிக்கை. எல்லா பிரச்சாரங்களில் வருகின்ற கடவுள்களை விட ஏதோ ஒரு கடவுள் இந்த உலகத்தை படைத்திருக்க வேண்டும் என்று அறிந்து, அந்த ஒரு கடவுளை நான் தேடத் தொடங்கினேன். அந்த கடவுளை எனக்கு காட்டுமாறு வேண்டவும் தொடங்கினேன். எனக்கு 23 வயதான பொழுது நான் என்னுடைய ஊரைவிட்டு மியாசாகி க்கு சென்றேன். என் நண்பர் ஒருவர் என்னை அழைத்திருந்தார். நான் கத்தோலிக்க ஆலயங்களுக்கு சென்று அங்கே மறைக்கல்வியை கவனமாக கேட்கத் தொடங்கினேன்.

தொடக்கத்திலேயே எனக்கு ஒரு சில ஒவ்வாமை இருந்தாலும் அதாவது ஜப்பானிய கலாச்சாரத்தில் பல கடவுள்களை வழங்குகின்ற கலாச்சாரத்தில் ஒரு கடவுளை ஏற்றுக் கொள்வதில் எனக்கு தயக்கங்கள் இருந்தன. இருந்தாலும் தொடர்ந்து கிறிஸ்தவத்தை படிக்க துவங்கினேன். மறை புத்தகத்திலே இயேசுவினுடைய பாடுகளையும்  உயிர்ப்பும் அவருடைய வியக்கத்தக்க மீட்பும் எனக்குள் ஏதோ செய்தது. தீர்க்கமாக ஒன்றை நான் முடிவு செய்தேன் இவரையே நான் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த கடவுள் என்று. 

இவ்வாறாக தன் கைப்பட அவர்கள் எழுதுகிறார்.  இந்த சகோதரியை பற்றி என்ன பிறர் சொல்கிறார்கள் என்று கேட்கலாமா! சிறு வயதிலிருந்தே இவர் தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக பிறருக்கு சேவையில் அர்ப்பணிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அது அவருடைய கலாச்சாரத்தில் இல்லை. கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட உடனேயே அவர் திருமுழுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்த எண்ணத்தை கொண்டிருந்தார்.

அவரே சொல்கிறார் நான் திருமுழுக்கு தயார்படுத்திக் கொண்டு நேரத்தில் சேவியரின் மழை போதக தந்தை சாந்த்ரோ டேனியேல் , எனக்கு புனித லெசியுஸ் நகர தெரசாவின் வாழ்க்கை வரலாறை வாசிக்கக் கொடுத்தார். அங்கே முதன்முறையாக இந்த எண்ணம் எனக்குள் தோன்றியது. பின்பு சேவியரின் மறை போதகர் சபையிலே சேர்ந்தேன். இதனுடைய ஸ்தாபக தந்தை கியாஹோமோ ஸ்பங்கோளா. அவர் கொண்டிருந்த இரக்கத்தின் எல்லாம் வல்ல கடவுளின் மீதான நம்பிக்கை என்னை வியப்படைய செய்தது. என்னுடைய இறுதி வார்த்தைப்பாட்டிலும் இதே கடவுளிடம் எங்களை ஒப்படைத்தோம்.

அன்னை மரியாளின் மீதான அன்பு அவருடைய வாழ்வு நிலை தேர்விற்கு உதவியது. 1961 இல் சேவியரின் ஜப்பானிய மரியாயின் மறை போதகர் சபையானது வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவர் அதற்குள் சேருகிறார் உறுப்பினர் ஆகிறார். மடடடாலேன இன்னும் அருள்சகோதரி இவ்வாறு இவரைப்பற்றி  கூறுகிறார். மோன்  தொடக்கத்திலிருந்தே அவளுடைய வாழ்க்கையில் இந்த தேர்வுக்கு நம்பிக்கையாய் இருந்தார். எங்கே சென்றாலும் ஓர்  குழுமத்தில் சுமூகத்தை   கீழ்படிதலின்  வழியாய் அவள் கொண்டு வந்தாள். அவளுடைய நிதானம், நகைச்சுவை குணம், எளிமை, எல்லோரையுமே அவளை வரவேற்க வைத்தது. இவள் நற்செய்தியின் உண்மையான  நபர். இவளுக்கு விண்ணரசு நெருங்கி இருக்கிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நிகழ்காலத்தில் வாழ்கிறார். எல்லாவற்றையுமே இயேசு அவரிடத்தில்  ஜெபத்தின் வழியாய் ஒப்புவித்தாள். அவள் அமைதியாக இருந்தாள் அமைதியை விதைத்தாள்.

இன்னொரு அருட்சகோதரி சொல்லுகிறார். இவர் திறந்த மனதுடன், புதிய எதிர்பாராத சூழ்நிலைகளை அழகாய் எதிர்கொள்ளும் மனம் உடையவர். எல்லாவற்றையுமே நகைச்சுவை கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடியவர். உலக நிகழ்வுகளை அடிக்கடி தெரிந்து கொண்டு அதனை எங்களோடு பகிர்ந்து அதனை ஜெபத்திலே நிறைவு செய்கின்ற ஒரு நபர்.

வயோதிக,  நோய்வாய்ப்பட்டோருக்கும்  தனிமையில் இருப்போருக்கும் இவள் சிறப்பு கவனத்தை செலுத்தினாள். ஒரு சேவியரின் சபை தந்தையானவர் இவரைப் பற்றி கூறுகின்றார். மறைபணி தொடக்க காலத்திலேயே எவ்வாறாக நடந்ததாக இவர் நினைவு கூறுகின்றார்.

பங்கு தளத்திலே நிறைய நோய்வாய்ப்பட்ட மக்கள் இருந்தார்கள். இவர்  என்னை இவர்களை சந்திக்க வருமாறு அழைத்துச் சென்றார். கையிலே திவ்ய நற்கருணை எடுத்துச் சென்றோம். அதுவே என்னுடைய முதல் அனுபவம். இவர்  எனக்கு உதவி செய்தார். இவரிடமிருந்து நோய்வாய்ப்பட்டவரை  எப்படி அணுகுவது, எப்படி அவர்களோடு ஜெபிப்பது, எப்படி அவர்களை மாற்றுவது, எப்படி அவர்களுடைய வாழ்வில் இயேசுவை கொண்டு வருவது, என்பதை அறிந்து கொண்டேன். தெரிந்துகொண்டேன்.

இவர்  நான் ஓர் உண்மையான மறை  பணியாளராக இருக்க வழியை திறந்து வைத்தார். உடலால் துன்பப்படுபவர்கள் கண்ணும் கருத்துமாய் பார்த்து தேர்ந்து உதவி செய்தவர். ஆழமான பார்வை கொண்டு மனதின் காயங்களை அறிந்தவர். துயரத்தில் இருப்போர் எல்லோருமே தெய்வீக மருத்துவருடைய மீட்பின் பணியை பெற்றுக்கொள்ள அவர்களை தயாரிக்க விருப்பம் கொண்டவளாய் இருந்தார். 

பல்சமய உரையாடலின் செயலாளராக சொல்லுகின்றார். இந்த சகோதரிக்கு நான் நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன். 3 ஆண்டுகள் இவர் பணி செய்தார் என்பதோடு மட்டுமல்ல, நிறைய பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்து இருந்தார். இவர் அங்கு இருந்தார் என்பதை சொல்வதை விட அவருடைய இருப்பு மிகச் சிறப்பாக இருந்தது. அமைதியும் நிதானமும் நகைச்சுவை உணர்வும் தனதாக்கி யவர். அதே நேரத்திலே குடும்ப வாழ்வின் சட்ட நெறிகளுக்கும் செபங்களும் முக்கியத்துவம் கொடுத்தவர். 2011 இல் இவருக்கு ஓர் கட்டி வந்தது. மருத்துவமனைக்கு இவரை சந்திக்க சென்றேன் என்கிறார் அந்த சபையின் நண்பர்.

இவர் உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட அவரைப் போன்று இல்லையே என்று என் மனதுக்குள் தோன்றியது. அவ்வளவு அமைதியான அழகான சிரிப்பு. அறை முழுவதையுமே கோவிலாக மாற்றியிருந்தார். நன்றி என்கின்ற ஜெபங்களை சொல்லிக்கொண்டே இருந்தார். என் இடமும் கூட உங்கள் ஜெபங்களுக்கு நன்றி என்றும் கூறினார்.

பிற நம்பிக்கை கொண்ட மக்களும் அங்கே இருந்தார்கள் அவர்கள் சொன்னது இவருடைய இறுதிக் காலத்தில் இவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்  "ஆண்டவரே, விரைவாய் வாழும், என்னை எடுத்துக்கொள்ளும்." திருத்தந்தை பிரான்சிசின் அப்போஸ்தலிக்க மடல் கவுததே எத் எக்சல்டடெ அதில் இவ்வாறு அவர் சொல்கிறார்.

"ஒவ்வொரு புனிதரும்  ஓர் மறைபணி. வரலாற்றில் குறிப்பான தருணத்திலே வெளிப்படுத்த தந்தையால் திட்டமிடப்பட்டவர். நற்செய்தியின் ஒரு குறிப்பான அம்சம். அந்த மறைபணி கிறிஸ்துவுக்கு உள்ளே முழுமையும் பொருளும் பெறுகிறது. அது கிறிஸ்துவின் வழியாய் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதன் மையமாய் புனிதத்தை அனுபவிப்பது, கிறிஸ்துவோடு ஒன்றிணைப்பது, மறைபொருளை காண்பது, இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும் பிரத்தியேக வழியிலே அதில் நம்மை ஒன்றிணைப்பது. தொடர்ந்து கிறிஸ்துவுக்காய் இறப்பதும், உயிர்ப்பதும்" எனும் வார்த்தைகள் இவரிள் நிறைவு பெறுகின்றன.

நாம் என்ன செய்யலாம்?