நம் துன்பங்களின் வெளிப்பாடு
இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன் - உரோமையர் 8:18. கழுகு தன 40 வது வயதில் மலை உச்சிக்குச் சென்று, தன் அலகுகளைக் கூர்மையாக்கி, தன் சிறகுகளைத் தானே பிடுங்கி, புது சிறகுகள் வளர வழி செய்யும். மேலும் 30 ஆண்டுகள் வாழ, அறுப்பதின் துன்பங்களை ஏற்ற கழுகு ஆர்ப்பரித்து பறக்கும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் துன்பங்கள் வான் வீட்டிற்கு நாம் பெரும் நுழைவு சீட்டுகள். அவற்றை உதாசீனப்படுத்தியோ, சுமை என்று எண்ணியோ, இறைவனின் தண்டனை என கருதியோ பயம் கொள்ள வேண்டாம். மாறாக தூய்மை என்னும் ஆடையணிந்து, பரிசுத்த வாழ்வு வாழ்ந்து, இறையன்பை பிறரோடு பகிர்ந்து முடிவில்லா மாட்சியில் பங்குபெற நம்மையே தயாரிப்போம்.
ஜெபம்: அன்பின் இறைவா! "அந்த நாள் பெரிய நாள்; மற்ற எந்த நாளும் அதை போன்று இல்லை" - நீர் மாட்சியோடு உம்மை வெளிப்படுத்தப்போகும் அந்த நாளுக்காக நாங்கள் எங்களையே தயாரிக்க எங்கள் சொல், செயல், சிந்தனை அனைத்தையும் புடமிட்டு நெறிப்படுத்தும். துன்பங்கள், உமது இரக்கத்தை பெற்று தரும் என்பதை நாங்கள் உணரச் செய்யும். உமது வார்த்தையும், அருட்சாதனகளும் எங்களை ஒளியின் மக்களாக மாட்சியுற செய்வதாக. இறைவனின் புனித மாதாவே, எங்களுக்காய் பரிந்து பேசும். புனித பீட்டர் நோலாஸ்கொவ் எமக்காய் மன்றாடும். ஆமென்.