களிமண்ணாக

 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை

திருத்தூதர் பணிகள் 9-8.,9

சவுல் கிறிஸ்தவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தவர். நீ துன்புறுத்தும் இயேசு என்று இயேசுவே கூறும் அளவுக்கு கொடுமையானவர். கர்வம் உள்ளவர். அரச பதிவியில் இருந்தவர். ஆண்டவரால் உடைக்கப்படுகிறார். மூன்று நாட்கள் கண்கள் தெரியவில்லை. பிறர் கைகளை பிடித்து கூட்டி செல்லும் அளவுக்கு உடைக்கப்பட்டார். உணவு இரக்கம் இல்லை. அதன்பின் ஆண்டவருடைய மீட்பை பெற்றார். ஆண்டவருக்காக ஓடும் அளவுக்கு மனமாற்றம் பெற்றார். ஆண்டவர் அவரை உயர்த்தினார் . திருமுகங்கள் பல எழுதினார். பல்வேறு மக்களை சந்தித்தார். இயேசுவை எடுத்துரைத்தார். இயேசுவின் அன்பை சுவைத்தார். எதுவும் என்னை கிறிஸ்துவின் பிறிக்காது என்று பறைசாற்றினார். என் அருள் உனக்கு போதும் என்று ஆண்டவர் சொல்லும் அளவுக்கு வாழ்ந்தார். .

கடவுள் எப்பொழுதுமே உடையும் பொருள்களை ரொம்ப அழகாக பயன்படுத்துவார். உடைந்த மேகங்கள்தான் மழையாக பொழிகிறது. உழபட்ட உடைந்த நிலம்தான் உழவுக்கு பயன்படுகிறது. உடைந்த விதைகள் தான் புதிய செடிகளை உருவாக்கும். உடைக்கப்பட்ட கல் தான் அழகிய சிலையாக மாறும். 

அதனால் எப்போதாவது நாம் உடைந்து நொறுங்கும் அளவுக்கு துன்பம் வந்தால் நம்புவோம். கடவுள் வேறு பெரிய விஷயத்திற்கு நம்மை உருவாக்குகிறார். நம்மை பயன் படுத்த போகிறார். நாம் அவரது அன்புக்குரிய பிள்ளையாக உள்ளோம்.

 

அன்பு ஆண்டவரே, உம் கையில் களிமண்ணாக இருக்கும் எங்களை உடையும் வனையும் உமக்குரிய பாத்திரமாக மாற்றும். நாங்களும் உம் பார்வைவையில் இரக்கம் பெற அருள் செய்யும். எங்களை உம் சிறகின் நிழலில் மூடி மறைத்து கொள்ளும். உம் அன்பை நாங்கள் உணர பண்ணும். ஆமென்