உருவாக்கியவரே

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

திருப்பாடல்கள் 95: 6,7

எங்கள் அன்பு ஆண்டவரே! எங்களை உருவாக்கியவர், உமக்கு நன்றி. இந்த நாளை கொடுத்தவரே, உமக்கு நன்றி. இதோ இந்த காலை பொழுதிலே, உம் பாதம் கூடி நாங்கள் நிற்கின்றோம் ஆண்டவரே. நாங்கள் ஒருவர் மற்றொருவரை இன்று அழைத்து உம்மை தொழ செய்தருளும் ஆண்டவரே.

'தொழுவோம்' என்ற வார்த்தைக்கு நெடுஞ்சாண் கிடையாய் தன்னை விட உயர்ந்தவரிடம்  தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதன் அடையாளம் என்று இன்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். எங்களுக்கு உயரிய நபர் நீரே ஆண்டவரே. ஏனெனில், எங்களை உருவாக்கியவர் நீர் தான் ஐயா. இந்த நாளை கொடுத்தவரும் நீர் தான் ஐயா. இந்த வார்த்தைகளை கொடுத்தவரும் நீர் தான் ஐயா. இந்த நாள்முழுவதும் நீர் எம்மோடு இருந்து, இந்த நாள் முழுதும் நான் உம்மை தொழவும், நாங்கள் ஒருவர் மற்றொருவரை அழைத்து உம்மை  தொழவும், இந்த நாள் முழுவதும் நீர் எங்களை  உருவாக்கியிருக்கின்றீர்.

நீர் எங்களோடு இருக்கின்றீர். உருவாக்கிய நீர் ஒருபோதும் எங்களை கைவிடுவதில்லை என்ற உன்னதமான அன்பின்   வெளிப்பாட்டை நாங்கள் உணர்ந்து எங்கள் வாழ்வை தொடர இந்த நாளை ஆசீர்வதியும் ஆமென்.