கடவுள் ஒருவரே

மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.

இணைச் சட்டம் 4-39.‘

ஆண்டவர் ஒருவரே கடவுள்.  அவரை நம்புவோம்.  கோள்களையும், நட்சத்திரங்களையும், காலங்களையும், உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர் அவரே.  அப்படிப்பட்ட கடவுளுக்கு அனைத்தும் அடிபணியும். காற்றையும் கடலையும் கூட அடக்க வல்லவர் அவர். 

 ஆண்டவர் எமோரியரை இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக் கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா ஆண்டவரிடம் பேசிய  பின்பு .  “கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” என்றார்.

அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன.  கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை”.  

ஆண்டவர் ஆறு நாட்களும் ஒவ்வொன்றாக படைத்தார்.  நாள் கிழமை, ராசி, நட்சத்திரம் எதுவும் பார்த்து அவர் எந்த செயலும் செய்யவில்லை. கருவில் உருவாகும் குழந்தை நல்ல நேரம் பார்த்து உருவாக்க படுவதில்லை. ஆண்டவரை நம்பு வோருக்கு எல்லா நேரமும், எல்லா நாட்களும் நன்மையை தருவதே.  இறை வேண்டலுடன் நம் செயலை தொடங்குவோம்.  வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை எதிர் கொள்ளும் வல்லமையை ஆண்டவர் நமக்கு தருவார். .

குறி ,ஜோதிடம்  சொல்லும் மனிதனுக்கும் அந்த அறிவை தந்தவர் அவரே.  பின் ஏன் நாம் ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வைக்க தவறுகிறோம். ஆண்டவரை நம்புவோம்.  அவரை முன்னிலைப்படுத்துவோம்.  வாழ்வில் மற்ற எல்லாம் நமக்கு சேர்த்து கொடுக்கப்படும்.

 

ஆண்டவரே எல்லாவற்றுக்கும் மேலாக உம்மையே நேசிக்கிறேன். என் வாழ்வில் எல்லா நொடிப் பொழுதும் என்னோடு இரும்.  வலப்புறம் இடப்புறம் திரும்பாது நான் உம்மையே நோக்கி பார்க்க அருள் தாரும். உம்மால் எல்லாம் கூடும். இன்றைய என் சூழ்நிலையை மாற்றி எனக்கு நன்மை செய்ய உம்மால் முடியும் என்று நம்புகிறேன் ஆண்டவரே.  ஆமென்.

Add new comment

10 + 0 =