உலக புகையிலை இல்லா நாள் | May 31
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் புகையிலை இல்லா நாள்; கொண்டாடப்படுகிறது. புகையிலை தொற்றுநோய் மற்றும் தடுப்பு குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளால் 1987 ஆம் ஆண்டில் உலக புகையிலை இல்லாத நாள் உருவாக்கப்பட்டது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகைபிடிக்கிறனர்.