இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு? | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 5 | Fr. Rojar | VeritasTamil

கடவுளும் ஒரு ஜோசியர் தான்!!! – 5

பதிலுக்காக நீங்க வேற எங்கயும் போக வேண்டா. நீங்க வாசிச்சதுல தான், அம்புட்டு பதிலும் இருக்கு. நான் முதல்லேயே தெளிவாச் சொல்லிட்டேனே? இந்த உலகத்துல ‘மனுசனுக்கு’ நடக்கிறத எழுதறது, ‘மனுசன் தான் – கடவுள் கிடயாது’ன்னு. பின்ன பதில் கண்டுபிடிக்க என்ன கஷ்டம்?

                         என்னப்பொறுத்தவர, நம்ம பாஸ் ‘யூதாசு’ காட்டிக்கொடுத்தது, கடவுள் எழுதுன ‘விதி’யால கிடையாது. ‘அவாளோட’ பணத்தாசையினால.  அம்புட்டுதான்....அப்ப, இயேசுவுக்கு யாரு காட்டிக்கொடுக்கப் போறான்னு தெரிஞ்சிருக்குமா? இல்லையா? ஏங்க, ‘தெரிஞ்சே, வேலிக்குள்ள போற ஓணான எடுத்து, நம்ம வேட்டிக்குள்ள வுடுவோமா?’ இயேசுவும் அப்புடித்தானுங்க. ‘நல்லவன்’னு நினைச்சு தான், கூட வச்சுகிட்டாரு. ஏன்னா, படம் போடுறதுல நம்ம ‘மனுசங்கள’ பீட் பண்ண முடியுமா? ‘ஆக்டிங்’ பின்னிருவானுங்களே? அதுவும் ‘காட்டிக்கொடுக்குறதுக்காகவே’ ஆக்டிங் போடனும்னா, நம்ம ஆளுங்களுக்கு ‘அல்வா’ சாப்புடுறதாச்சே!!!

                          ‘இங்க’ன்னா நம்ம ‘கருணாகரி’ காட்டிக்கொடுத்தாள், ‘கருணா’ கூட்டிக்கொடுத்தான். (எத்தன வருசமா, ‘எட்டப்பனேயே’ சொல்றது. அப்டேட் பண்ணிக்கிடுவோம்...) இதே இது ‘வெளிநாடு’ன்னா, ‘புரூட்டஸ்’ முதுகுல குத்துனான். அம்புட்டு தாங்க நம்ம மனுசங்க!!! எல்லா இடத்துலேயும், ஒரே குட்டையில ஊறுன மட்டைதானுங்க!!! இந்த இடத்துல எனக்கு, நம்ம TR மாதிரி, மனுசன்னா யாரு?ங்கிறத, ‘ரைமிங்’கா சொல்லனும்னு ஆசையா இருக்கு. சொல்லட்டா?  சிரிக்கக்கூடாதுங்க!!! காட்டிக்கொடுப்பவனும், கூட்டிக்கொடுப்பவனும் கழுத்தறுப்பவனும் கருவறுப்பவனுமே, “மனு”...சன்”...  (எப்புடீடீடீ!!!)

                       இப்ப நம்ம ‘பாஸ்’ கதைக்கு வருவோம். சாகுறத்துக்கு கொஞ்ச நாளக்கி முன்னாடியே, ‘கூட இருக்கிறவன்ல’ எவனோ ஒருத்தன் தான், நமக்கு ‘ஆப்பு’ வைக்கப் போறான்னு, இயேசு கட்டாயம் ‘கணிச்சிருப்பாரு’. எப்புடின்னு கேட்குறீங்களா? “நடக்குறத” வச்சு “நடக்கப் போறத” கணிக்கிறது, தான் “ஜோசியங்க”. கடவுள் ஜோசியர்னா, அவரு புள்ள இயேசுவும் ‘ஜோசியத்துல’ கில்லாடியாத் தானுங்க இருந்திருப்பாரு???

                        நம்ம இயேசுவுக்கு ஒரு கட்டத்துல ‘நன்னா’ தெரிஞ்சிருக்கும், ‘புருட்டஸ்’ நம்ம கூட தான் இருக்கான்னு. ஆனா, அந்த நேரத்துல அவரு கனவுல கூட நினைச்சிப் பார்க்காத ஒன்னு, போட்டுக் கொடுக்குறவன், அந்த பன்னிரெண்டு போ்ல ஒருத்தனா இருப்பாங்குறதது தான்....ஏன்னா, பல பேரு சீடர்களா ‘இயேசு கூட’ இருந்தாங்களே? அதுல “பெண்களும்” இருந்தாங்களே? (சீடர்கள் வேற, திருத்தூதர்கள் வேறங்க!!!)

                      இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு? அப்புடின்னு நீங்க கேக்கலாம். கட்டாயம் கேக்கனும்... நாங்களும் படிச்சவங்க தாங்க! உங்கள விட, இதுல கொஞ்சம் அதிகமாவே ‘தெரிஞ்கிட்டவங்க’. அதனால தான்,  “படிச்சி கத்துகிட்டத”, “கத்துக்குட்டி”யா, உங்களுக்கு புடுச்ச ‘மொழியில’ எல்லாருக்கும் ‘புரியுற’ மொழியில, எழுதுறோம். தப்புன்னா சொல்லுங்க? திருத்திக்கிடுவோம்....”எழுதியது எழுதியதே”ன்னு சொல்ற வம்சம் நா கிடையாதுங்கோ!!!

                     இயேசுவுக்கு ஏன் ‘யாருன்னு’ தெரிஞ்சிருக்காது? நம்ம ஆளுங்கன்னா, ‘வெத்திலை’யில, மை போட்டு “ஆள” தூக்கிருப்பானுங்க. பாலஸ்தீனத்துல வெத்துல கிடையாதே?(சும்மா ஜோக்குக்காகங்க...இல்லன்னா ‘போரடிச்சுரும்’...) அப்ப எப்புடி, அவரு யூதாசைப் பாத்து, ‘செய்ய வேண்டியத சீக்கிரம் செய்’யுன்னு, சொன்னாரு?ன்னு, நீங்க ஏதோ என்ன ‘கையும் களவுமா’ பிடிச்ச மாதிரி, கேள்வி கேட்கிறது, என் ‘காதுக்கு’ கேட்டிருச்சே? பதில ‘கண்டுபிடிக்காமயா’ இவ்வளவு தைரியமா எழுதுவேன்? ஏன்னா என்னோட பேரே, Doubting Thomas ங்க.

                           “சந்தேகம்” என் பெயரோட ‘ஒட்டிப்பிறந்தது’ங்க. ஆனானப்பட்ட உயிர்த்த இயேசுகிட்டயே, என் ‘சந்தேகப்’புத்திய காட்டுனேன்னா, பாத்துக்கிடுங்க! ‘ஒட்டிப்பிறந்ததுன்னு’ சொன்ன உடனே, எனக்கு ஒரு “சீக்ரெட்” ஞாபகத்திற்கு வருது. ஆங்....எனக்கு இன்னொரு பேரு இருக்குங்க. அது தெரிஞ்சிருக்கும். ஆனா, அதுக்கு அர்த்தம் என்ன? அது தெரிஞ்சிருக்காதே? கண்டுபிடிங்க பார்ப்போம் (ஒரு க்ளு தர்றேன். (இன்னொரு ‘பேர’ கண்டுபிடிக்க “இங்க” போங்க - யோவான் 11: 16, 20: 24, 21: 2). ‘அர்த்தத்த’ கண்டுபிடிக்க, ‘கூகுளுக்கு’ போங்க... டீல் ஓ.கே வா?  இல்லன்னாலும், பக்கம் முடிஞ்சிடுச்சே!!!

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://www.RadioVeritasTamil.org​​ Blog: http://tamil.rvasia.org​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

Add new comment

11 + 7 =