உயர்ந்தவன் தாழ்ந்தவன்! | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil |
தெரெசாபுரம் என்ற ஒரு பெரிய கிராமத்தில் இருதரப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வந்தனர். கிராமத்தின் மத்தியில் குடி தண்ணீர் கிணறு ஒன்று இருந்தது. அதில் உயர்குடி மக்கள் மட்டும் தண்ணீர் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
கோடைக்காலம் தொடங்கியதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகியது. சுட்டெரிக்கும் வெயிலில் குடிதண்ணீர் இன்றி கிராம மக்கள் அதிகம் துன்பப்பட்டனர். காசு கொடுத்தால் பால் வாங்க முடியும். மதுவும் கிடைக்கும். ஆனால் குடிநீர் கிடைப்பதில்லை என்பது மக்களின் குரல்.
தெரெசாபுரத்திலுள்ள கிணறும் வற்றிப் போய்விட்டது, தூர்வாரும் வேலை பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த நான்கு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூர்வாரியவுடன் அதிகமாகத் தண்ணீர் சுரந்தது. உயர்குடி மக்கள் தண்ணீரை எடுத்துச் சென்றனர். பின்தங்கிய சமுதாய மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஒருநாள் நண்பகல் வேளை. கடும் வெயில். சுட்டெரிக்கும் வெப்பக் காற்றுக்குப் பயந்து, மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அந்த நேரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த ஒருபெண் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு வந்தாள். அவள் தண்ணீர் எடுப்பதைப் பார்த்த உயர்குடி மக்கள் கிணற்றருகே கூடிவிட்டனர். சிறிது நேரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மக்களும் அங்கு கூடிவிட்டனர்.
இருபிரிவினருக்கும் சண்டை வரும் என்று அறிந்த பங்குத்தந்தை பின்தங்கிய இனத்தைச் சேர்ந்தவள். கிராமக்கட்டுப்பாட்டை மீறி, எங்கள் விரைவாக அங்கு வந்தார். பங்குக்கந்தையிடம் உயர்குடியினர், "இப்பெண் என்றனர். அவர்களின் பிரச்சனையைக் கேட்டுக் கொண்டிருந்த போதே. கிணற்றில் கண்ணீர் எடுத்தாள். எனவே இவள் தண்டிக்கப்படவேண்டும்" பங்குக்கந்தை மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் கீழே விழுந்ததைப் பார்க்க மக்கள் அதிர்ச் அடைந்தனர். கண்ணீரை எடுக்க வந்த பெண் கன் குடத்திலுள்ள தண்ணீரை எடுத்து பங்குத்தந்தையின் முகத்தில் தெளித்தாள். வறண்டு காணப்பட்ட வாய்க்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். பங்குத்தந்தை மயக்கம் தெளிந்து மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவரைச் சுற்றி பெரிய கூட்டம்.
பங்குத்தந்தை, "எனக்குத் தண்ணீர் கொடுத்தது யார்?" என்று கேட்டார். அதற்கு மக்கள் "கிணற்றில் தண்ணீர் எடுத்த பெண்" என்றனர். "உயர் குடியில் பிறந்த எனக்கு இறக்கும் வேளையில் தண்ணீர் கொடுத்து, என் உயிரைக் காப்பாற்றிய, இந்த பெண்ணை பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவள் என்று கூறுவது மிகப்பெரிய பாவம். மேலும் கிணறு வற்றியபோது, தூர் வாரி, தண்ணீர் சுரப்பதற்கு வேலை செய்தவர்களை பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, அவர்கள் இந்தக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று கூறுவது மிகப்பெரிய அநீதியாகும்" என்று கூறினார் பங்குத்தந்தை.
பங்குத்தந்தையின் முயற்சியால் மக்களிடத்திலிருந்த பகை, பிரிவினை, பாகுபாடு அகற்றப்பட்டு எல்லா மக்களும் அந்தக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தொடங்கினார்கள்.
குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும், இறைவன் எல்லா மக்களுக்கும் இலவசமாகக் கொடுத்த பரிசு என்பதை மறந்து விடக்கூடாது.
"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."
ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.(நீமொ 22:22)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
