இறைவனின் பரிசு.| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2024

இறைவனின் பரிசு.

     நேற்று என்பது முடிந்து போன ஓன்று.அது கடந்த காலம்.இது வரை நாம் வாழ்ந்தது அனைத்துமே கடந்த காலம் தான்.

கடந்த காலத்தில் நடந்தது அனைத்துமே நடந்து முடிந்து விட்டது.அனைத்தும் நம்மை கடந்து போய் விட்டது.மீண்டும் அவை திரும்ப வரவே வராது.

   நாம் கடந்து வந்த அனைத்தையும் மீண்டும் எதிர் கொள்ள வாய்ப்பே இல்லை. அதில் நடந்தவைகள் அனைத்தும் நடந்தவைகளே.

   நடந்து முடிந்து போன எதையும் நம்மால் மீண்டும் சரி செய்ய முடியாது. நடந் தது நடந்தது தான். கடந்தது கடந்தது தான்.

    ஆனால் அவைகள் அனுபவங்களாக நம் நினைவில் இருக்கும். அந்த அனுபவத் தை நம்மால் எண்ணிப் பார்க்க முடியும்.

அந்த அனுபவம் நம் எண்ணத்தில் மட்டுமே இருக்கும்.நிஜத்தில் உணரமுடியாது. கடந்து வந்தது வந்தது தான்.

ஆனால் அது கற்றுத் தந்த பாடத்தை எதிர் கால செயல்களில் நாம் பயன் படுத்த முடியும். அதே சமயம் எதிர் காலம் என்பதும் நம் கற்பனையே.

  கடந்த காலத்தை போலவே எதிர்காலமும் நம் சிந்தனையில் தான் இருக்கி றது.உண்மையில் எதிர்காலம் என்ற ஒன்று இப்போது இல்லை.

  நாளை என்பது நிச்சயம் இல்லாத ஒன்று. இன்று இரவு நாம் உயிரோடு இருப் போமா என்பது கூட நமக்கு தெரியாது.

  கடந்த காலம் என்பது இருந்தது.அது கடந்து போயிற்று.இனி ஒரு போதும் வரப் போவதே இல்லை.

எதிர்காலம் என்பது நாம் பார்க்கவே இல்லை.எதிர் காலம் என்பது வரலாம்.ஒரு வேளை வராமலே கூட போய் விடலாம்.

எதிர்காலம் என்பதும்  முழுவதும் நமது கற்பனையில் தான் இருக்கிறது. கடந்த காலத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்.எதிர் காலத்தை நாம் அனுபவிக்கவில் லை. கடந்த காலம் அனுபவமாக சிந்தையில் இருக்கிறது.எதிர்காலம் யூகமாக சிந்தையில் இருக்கிறது.

   கடந்த காலம் எதிர் காலம் இரண்டும் உண்மையில் இப்போது இல்லை. அவை வெறும் எண்ணம் மட்டுமே.

  கடந்த காலம்,அனுபவத்தின் மூலம் அநேக விஷயங்களை நமக்கு கற்றுத் தந்தி ருக்கிறது. அந்த பாடங்களை  நம்மால் பயன் படுத்த முடியும்.

  ஆனால் அவற்றை நிகழ் காலத்திலோ அல்லது எதிர் காலத்திலோ தான் பயன் படுத்த முடியும். மீண்டும் கடந்த காலத்திற்கு சென்று நடந்து முடிந்தவைகளில் பயன் படுத்தி மாற்ற முடியாது.

  கடந்த கால அனுபவங்கள் மூலம், இனி எதிர் காலத்தில் அது போன்ற சூழ் நிலை வந்தால் எப்படி அதை எதிர் கொள்வது என்று திட்டமிட முடியும்.

  அதே சமயம் எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வருமா என்று நம்மால் உறுதி யாக சொல்ல முடியாது. வரலாம் வராமலும் போகலாம்.

  கடந்த காலம் நம்மை கடந்து சென்று விட்டது . எதிர் காலம் என்பது இனியும் வரவே இல்லை.

   உண்மையில் கடந்த காலம் ,எதிர் காலம் இரண்டுமே இப்போது இல்லை. இப்போது இருப்பது நிகழ் காலம் மட்டுமே.

  நிகழ் காலம் மட்டுமே நிஜம். மற்ற இரண்டும் நமது சிந்தனையில் மட்டுமே இருக்கிறது.

  நாம் கடந்த காலத்தில் ஒருபோதும் செயல் செய்ய முடியாது. எதிர்காலத்தில் செயல் செய்ய பிளான் பண்ணலாம்.அவ்வளவு தான்.

   ஆனால் இதோ இங்கே இப்பொழுது நம் கண் முன் நிகழ்காலம் நின்று நிகழ் ந்து கொண்டு இருக்கிறது.

  நாம் இப்போது செயல் செய்ய முடியும்.நம்மால் இப்போது மட்டுமே செயல் செய்ய முடியும்.

  நம் கண் முன் நிற்கும் இந்த கணம் மட்டுமே நிஜம்.இதில் மட்டுமே நம்மால் செயல் செய்ய முடியும்.

ஒரு கணம் தாமதித்தால் கூட இந்த கணம் நம்மை கடந்து கடந்த காலத்திற்கு சென்று விடும்.அதன் பின் போனது போனது தான்.

  அதனால் ஒரு கணமும் நாம் வீண் செய்யாது ஒவ்வொரு கணத்தையும் பயன் படுத்த வேண்டும்.

   இந்த கணம் என்பது இறைவன் நமக்கு தந்த பரிசு.(present) வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது.

   இந்த வாய்ப்பை எப்படி பயன் படுத்துவது என்பதில் தான் உங்கள் வாழ்கை இருக்கிறது.

   கடந்த கால அனுபவங்கள் தந்த அடிப்படையில்.எதிர்காலத்தில் எப்படி எதிர் கொள்வது என்று நீங்கள் திட்டம் தீட்டி இருந்ததை, இப்போது இங்கே இந்த நிகழ் காலத்தில் செயல் செய்வதின் மூலமாக பயன் படுத்தி வாழ்வில் பயன் பெறுங்கள்.

  கடந்த காலமும் ,எதிர் காலமும் நமது சிந்தனையில் தான் இருக்கிறது. ஆனா ல் நிகழ் காலம் நம் கண் முன் அனுபவமாக நடந்து கொண்டு இருக்கிறது.

   அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்.முழுமையாக அனுபவியுங்கள்.அதில் இருந்து கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.

  ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு.நழுவ விடாதீர்கள். இறைவன் தந்த பரிசினை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளர்க 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி