இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார்.
படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல் என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.
"Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.
ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.