குடும்பம் என்ற அன்புச் சூழல்.| பாரதி மேரி | VeritasTamil
குடும்பம் என்ற அன்புச் சூழல்...
ஒரு கிராமத்தில் மிக அழகான அளவான குடும்பம் ஒன்று இருந்தது. டீச்சர் ஆக பணிபுரியும் Blesson டீச்சர், அவருக்கு அழகிய ஓவியம் வரைவதில் அதிகம் ஆர்வம். பனி நேரங்கள் கழிந்து எதையாவது கிறுக்கி கொண்டு இருப்பார். இப்படியிருக்க ஒரு முறை தற்செயலாக ஒரு நாளிதழ் ஒன்றில் அவர் வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது. எனவே இதனை தொடர்ந்து தான் இன்னும் பல ஓவியங்கள் வராயவெண்டும் , புகழ்பெற வேண்டும் என்று அவர் நினைத்தார். வேலைநேரம் பிறகு முழுநேரமும் ஓவியத்தின் மீது அதிகம் ஆர்வம் அதிகம் ஆகி தன் இரு குழந்தைகள், அழகிய மனைவி என்று அனைவரையும் வெறுத்து ஒதுக்கினார்.
ஒருநாள் பள்ளிக்கு மட்டம் போட்டுவீட்டே தன் ஓவியத்தின் கருப்பொருள் தேட சென்றுவிட்டார்....
வழியில் கண்ட விவசாயி, மலைமுகட்டில் மறைந்த சூரியன், மேகம், பறவை..., பார்ப்போரை வியக்கும் நடிகை நடிகைகள், அனாதை ஆசிரமத்தில் உதவும் கரங்கள், மேலும் காலை முதல் மாலை வரை தன் கண்களில் தென்பட்ட பலவற்றை வரைந்து அது ஒன்றும் அவருக்கு நிறைவு அளிப்பதாக இல்லை. மணனொந்தவராய் தன் வீடு நோக்கி நடந்தார்.. தூரத்தில் அவர் தன் மனைவி மக்களை அவர் வீட்டின் அருகில் கண்டார். தன் மனைவி தன் மகனுக்கு உணவு ஊட்டிகொண்டு , தன் மகளை மடியில் படுக்க வைத்து கொண்டு தாலாட்டு பாடி கொண்டு இருந்தாள்.. இவற்றை கண்ட அவர், அவர்கள் அறியவன்னம் அவர்களை வண்ணம் தீட்டினார். அதை அவர் கண்டபோது மனதில் ஒரு நிறைவு ஏற்பட்டது.
அன்பிற்கினியவர்களே ..
பல நேரங்களில் அழகையும், அன்பையும், ஆதரவையும் வெளியில் தேடுகிறோம். ஆனால் இவற்றை நம் குடும்பங்களில் காணலாம் என்று மறந்துவிடுகிறோம். பல சூழல்களில் எரிச்சல் அடைந்து நம் சூழலை கெடுத்துவிடுகிறோம்.
அனைத்திலும் உயர்ந்தது அன்பு சூழல் இது உங்களிடமே உள்ளது, உலகை சுற்றி தேடுவதில் என்ன நியாயம்?
- இர. பாரதி மேரி.