தோற்றத்தைக் கண்டு மதிப்பிடுகிறோமா?| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
அரியலூர் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோயில். 250 ஆண்டுகாலப் பழமையான கோவில் இது. ஏராளமான திருப்பயணிகள் வந்து போகக்கூடிய இடமாக இது இருப்பதால் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை ஒன்றை எடுத்திருக்கிறார். அந்தக் கோவிலின் பின்புறத்தில் உள்ள கடையின் பின் வெகுநேரமாக ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஓடிச் சென்று அந்த முதியவர் பார்த்தபோது, பிறந்து ஒரு நாளே ஆன அழகான ஆண்குழந்தை. ஒரு துணியில் சுற்றி குப்பைத் தொட்டியின் அருகில் போடப்பட்டிருந்தது.
ஒரு நாளே ஆன அந்தப் பச்சிளங்குழந்தையைச் சுற்றித் தெருநாய்களின் கூட்டம். எப்போது அந்தக் குழந்தையைக் கவ்விக்கொண்டு போகலாம் எனக் காத்துக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக அந்த முதியவர் நாய்களை விரட்டியடித்து, அந்தக் குழந்தையைத் தூக்கி வந்தார். அவர் மட்டும் அன்று குழந்தையைத் தூக்கவில்லையெனில் அந்தக் குழந்தை நிச்சயம் நாய்களுக்கு உணவாகியிருக்கும்.
பிச்சை எடுத்துக்கொண்டிருப்பவரின் கையில் இருக்கும் குழந்தையைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 அவசர மருத்துவ வாகன சேவை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் அந்தக் குழந்தையை மீட்டெடுத்தனர்.
ஒருவரின் தோற்றத்தைக் கண்டு நாம் எளிதாக எடைபோட்டு விடுவோம். ஆனால், அவர்களிடமும் அன்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் காலம் அவர்களிடமும் மனிதாபிமானம், கருணை, இரக்கம், வெகுவிரைவில் வரட்டும். மனிதம் காக்கப்படட்டும். மனிதர்களை மனிதர்களாக மதிக்க இந்தச் சமூகம் கற்றுக்கொள்ளட்டும்.
பிறரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அது உங்கள் உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
