"உலகெங்கும் மனித உரிமைகள் ஆபத்தில் உள்ளன” | Veritas Tamil

"உலகெங்கும் மனித உரிமைகள் ஆபத்தில் உள்ளன”

செப் 20: வத்திக்கானில் ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோருக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி, திருத்தந்தையை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், திருத்தந்தையின் புலம்பெயர்ந்தோருக்கான பணிகள் தன்னை மிகவும் ஊக்கமூட்டுவதாகத் தெரிவித்தார்.

மேலும், போர்களால் ஏற்படும் உலகளாவிய விளைவுகளைப் பற்றித் திருத்தந்தையிடம் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், "மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் அதிலும் குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உக்ரைனில் இரஷ்யா போன்ற நாடுகளால் உருவாக்கப்படும் தவறான முன்னுதாரணங்கள், உலகம் முழுவதும் மனித உரிமைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தானவை" என்றும், "ஆகவே, உலகளாவிய மனிதாபிமான சட்டம் மற்றும் மற்ற மனித உரிமைகள் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம்" என்றும் தெரிவித்துள்ளார்.

உலகைப் பாதிக்கும் பல "மறக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு" (forgotten crises) திருத்தந்தையும் வத்திக்கானும் மிகுந்த கவனம் கொண்டிருப்பதற்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்த அவர், வத்திக்கானுக்கு வரும்போதெல்லாம் முக்கிய ஊடகங்களின் கவனத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பல மக்களைப் பற்றிக் கலந்துரையாட தனக்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily Program

Livesteam thumbnail