திருப்பலியில் சைகை மொழி கோரும் கத்தோலிக்கர்கள்! | Veritas Tamil
மும்பையின் கத்தோலிக்க செவித்திறன் குறைபாடுடையோர், தங்களது பங்குத் தளங்களில் நடைபெறும் திருவழிபாடுகளில் முழுமையாகப் பங்கேற்கும் வகையில், வழக்கமான திருப்பலிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் மேரி பெருங்கோவிலுக்கு நவம்பர் 15ஆம் நாள் மேற்கொண்ட திருப்பயணத்தின்போது இவ்வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.
பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள புனித தெரசா ஆலயத்திலிருந்து தொடங்கிய இத்திருப்பயணம், காலை 11 மணிக்கு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியுடன் நிறைவடைந்தது. செவித்திறன் குறைபாடுடைய அருள்பணியாளர் அருள்தந்தை ஜோசப் தெர்மடோம் அவர்கள் இத்திருப்பலிக்குத் தலைமை தாங்கினார். பங்கேற்றவர்கள் சைகை மொழி மூலம் இறைவேண்டல்களையும் பாடல்களையும் வெளிப்படுத்தி, திருவழிபாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பம்பாய் செவித்திறன் குறைபாடுடையோர் மையத்தைச் சேர்ந்த சுசான் அல்மெய்டா அவர்கள், திருப்பலியில் பாடல்களையும் இறைவேண்டல்களையும் சைகை மொழியில் வெளிப்படுத்தினார்.
கத்தோலிக்க செவித்திறன் குறைபாடுடையோரும் செவித்திறன் கொண்டவர்களும் இணைந்து வழிபடும் வகையில், வழக்கமான பங்குத் திருப்பலிகளை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை அருள்தந்தை ஜோசப் தெர்மடோம் அவர்கள் வத்திக்கான் வானொலி ஆசியப் பிரிவிடம் எடுத்துரைத்தார்.
மேலும், வழக்கமான திருப்பலிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கத்தோலிக்கத் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் சொற்களையும் வெளிப்பாடுகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மும்பை உயர் மறைமாவட்டம், இந்திய சைகை மொழியில் பயிற்சி பெற்ற மறைமாவட்ட அருள்பணியாளர் ஒருவரை உருவாக்கி, செவித்திறன் குறைபாடுடையோரின் ஆன்மிகத் தேவைகளுக்குப் பணியாற்ற ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். பாந்த்ராவில் அமைந்துள்ள அலி யாவர் ஜங் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகாலப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அருள்தந்தை ஃப்ரெடி அல்போன்சோ மற்றும் ஸ்டானி அல்போன்சோ ஆகியோரால் 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பம்பாய் செவித்திறன் குறைபாடுடையோர் மையம், வழிபாடு, நட்புறவு மற்றும் சமூக வாழ்வுக்கான இடமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது சுமார் 20 குடும்பங்களை ஒன்றிணைக்கும் இம்மையத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புனித தெரசா ஆலயத்தில் திருப்பலி நடைபெறுகிறது.
“கத்தோலிக்க செவித்திறன் குறைபாடுடையோரை வரவேற்கும் ஒரே திருப்பலி இங்குதான் நடைபெறுகிறது” என்று அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். பாந்த்ராவிற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதும், பிற இடங்களில் அனைவரும் அணுகக்கூடிய திருப்பலிகள் குறைவாக இருப்பதும் பலருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இம்மையம் உறுப்பினர்களிடையே உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறது. புனித தெரசா ஆலயம் நிகழ்ச்சிகளுக்கான இடத்தை வழங்கினாலும், இச்சமூகம் தனக்கென நிதியையும் பராமரித்து வருகிறது.
இவான் அல்மெய்டா மற்றும் அவரது மனைவி சுசான் ஆகியோர் அண்மையில் நான்காவது ஆசிய செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்க மாநாட்டில் பங்கேற்று, ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்கர்களைச் சந்தித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இணையவழியில் இணைந்து திருஜெபமாலை செபித்து வந்தவர்களை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். “ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க செவித்திறன் குறைபாடுடையோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களில் சிலருடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இணையவழியில் ஜெபமாலை செபித்து வந்தோம். அவர்களை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது” என்று அவர்கள் கூறினர்.
2029ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது மாநாட்டிலும் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மவுண்ட் மேரி பெருங்கோவில் அதிபர் அருள்தந்தை வெர்னன் அகுயார் அவர்களும் திருப்பயணத்திற்குப் பின்னர் இச்சமூகத்தினரைச் சந்தித்து, அவர்களின் இறைநம்பிக்கைப் பயணத்தில் ஊக்கமளித்தார். விளையாட்டுகள், நட்புறவு மற்றும் பகிர்ந்து உண்ணும் உணவுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்கர்களுக்கென தனித்தனி வழிபாடுகளை நடத்துவதைக் கடந்து, திருச்சபையின் திருவழிபாடு, ஆன்மிகப் பணிகள் மற்றும் சமூக வாழ்வில் அவர்கள் முழுமையாகப் பங்கேற்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இத்திருப்பயணம் எடுத்துரைத்தது.