திருத்தந்தையின் ஆப்பிரிக்க திருத்தூதுப் பயணத் திட்டம் வெளியீடு | Veritas Tamil

ஏப்ரல் 13 முதல் 23 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தின் விரிவான விவரங்களை திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனரான மத்தேயோ புரூனி  அவர்கள் தெரிவித்துள்ளார்.வெளியிட்டுள்ளார்.

துருக்கி, லெபனான் மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொண்ட முந்தைய திருத்தூதுப் பயணங்களைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த திருத்தூதுப் பயணம் பன்னிரெண்டு நகரங்கள் வழியாக பதினொரு நாள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏப்ரல் 09, வியாழனன்று, செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இவ்வாறு கூறிய இயக்குனர் புரூனி  அவர்கள், இந்த திருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார் என்று தெரிவித்தார்.

துருக்கி, லெபனோன் மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொண்ட முந்தைய திருத்தூதுப் பயணங்களைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த திருத்தூதுப் பயணம் பன்னிரெண்டு நகரங்கள் வழியாக பதினொரு நாள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த திருத்தூதுப் பயணத்தின் போது ஆப்பிரிக்க கண்டத்தின் கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பல மொழிகளில் உரைகள் இடம்பெற உள்ளது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் திருத்தூதுப் பயணம் பல பத்தாண்டுகளாக ஒரு திருத்தந்தையைக் கண்டிராத பகுதிகளை முன்னிலைப்படுத்துகிறது என்றும் குறிப்பாக அல்ஜீரியாவிற்கு ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக இது அமையும் என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

அங்கு திருத்தந்தை அவர்கள், ஹிப்போ நகர் புனித அகுஸ்தினாரின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து, இடம்பெயர்வு மற்றும் வளங்களின் சுரண்டல் குறித்து பேசும் அதே வேளையில், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உரையாடலை மேம்படுத்தவுள்ளார் என்று அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் தன்னுள் அடக்கிய சிறு ஓவியமாய் விளங்கும் கேமரூனில் நிலவும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இடம்பெறும் இந்த திருத்தூதுப் பயணம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முழுமையான மனித மேம்பாடு ஆகியவற்றில்  கவனம் செலுத்த உள்ளதாக இயக்குனர் புரூனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்கோலா பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கிய இயக்குனர் புரூனி அவர்கள், இப்பயணம் அந்நாட்டு இளைஞர்களின் எழுச்சிக்கும், அவர்களின் எதிர்கால நம்பிக்கைக்கும் புத்துயிர் அளிப்பதாக அமையும் என்றும், அதே வேளையில், நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் ஊழல் மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற கடினமான சவால்களை எதிர்கொள்வதிலும் திருத்தந்தை தனது கவனத்தைச் செலுத்துவார் என்றும்  தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் இந்தப் ஆப்பிரிக்கப் பயணம் ஈக்குவடோரியல் கினியாவில் நிறைவுபெறவுள்ளது என்று கூறிய இயக்குனர் புரூனி அவர்கள், அங்கு அவர் அந்த நாட்டின் பண்பாட்டுச் செழுமையையும், இயற்கை வளங்களையும் போற்றுவதுடன், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் திருஅவை ஆற்றிவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை உலகிற்கு எடுத்துரைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil Survey Popup Image