தன் குரலிலேயே நன்றிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக உலகம் முழுவதும் செபித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தையின் உடல் நலத்திற்காக, பிப்ரவரி 24 முதல் உரோம் நகரிலுள்ள கர்தினால்கள், வத்திக்கான் அதிகாரிகள் மற்றும் விசுவாசிகளோடு இணந்து உரோம் நேரம் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு நாளும் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி ஜெபமாலை செபித்து வருகின்றனர்.
வியாழன் இரவு இந்த செபமாலைக்கு முன் திருத்தந்தை அவர் குரலில் இஸ்பானிய மொழியில் வழங்கிய நன்றிச் செய்தி வளாகத்தில் ஒலிபரப்பப்பட்டது.வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஜெபமாலை பக்தி முயற்சியை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் கர்தினால் Ángel Fernández Artime அவர்கள் வழிநடத்தினார்.
Daily Program
