பள்ளி மட்டும்தான் கற்பதற்க்கா! | மரிய அந்தோணி ராஜன் SdC

ஒரு தாத்தாவின் சிந்தனை.

அதிகாலையில் விழித்து எழுந்து, கடவுளை வணங்கி, பாடம், படிப்பு என புத்தங்களை புரட்டிக்கொண்டிருந்த பேரன்,இப்போது நண்பகல் வரை உறங்குகிறான்.

காரணம்: படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

காலை உணவு முடித்து, அழகாய் தயராகி, புத்தகப்பையோடு புதுநடை போட்டு பள்ளிக்கூடம் சென்ற பேரன்,இப்போது புத்தகப்பையை புழிதியிலே விட்டெறிந்திருக்கிறான்.

காரணம்: படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

பள்ளி,விடு என தன் வேலைகளை சரியாய் செய்து ஓய்வு நேரத்தில் விளையாடச் சென்ற பேரன்,இப்போது ஓய்விற்காக மட்டுமே வீட்டிற்கு வருகிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

சின்னச் சின்ன சண்டைகள் நடுவே, வீட்டுப்பாடங்களை கூடிப்படிக்கும், தங்கைகளுக்கு அன்பு அண்ணனாயிருந்த அன்புப் பேரன், இப்போது, தன்னந்தனியாய் மொபைல் போனில் விளையாடிக்கொள்கிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

நாளைக்கு பள்ளி உண்டு என படுசுட்டியாய் வேலை முடித்து, வெருசீக்கிரமாய் தூங்கச் சென்ற பேரன், இப்போது, நடுஇரவில் கூட, மொபைல்களில் நகம் தேய்த்துக் கொண்டிருக்கிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

நன்றாய் படிக்க வேண்டும், நல்ல மதியபெண்கள் எடுக்க வேண்டும் என தினம் தினம் சாமியை வேண்டிய பேரன், இப்பொது, பூஜை அறையை மறந்தே போயிருக்கிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

சேர்ந்து படிக்கிறோம் என பக்கத்து வீட்டு சுட்டிகளுடன் கூடி படித்து, ஓடி  விளையாடிய பேரன், இப்போது, நான் விளையாடப் போகிறேன் என தனியாகச் சென்று கதவையும் பூட்டிக் கொள்கிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

தாத்தா, எப்படி இருக்கீங்க? என என் கன்னம் கிள்ளி, பழங்கால கதை கேட்க பாசமாய் என்னருகே வந்த பேரன், இப்போது அழைத்தாள் என்ன வேணும்? என கேட்க மட்டுமே என்னருகே வருகிறான்.

காரணம் : படிப்பதற்க்கு ஒன்றும் இல்லையாம்!

படிப்பதற்கு ஏன் ஒன்றுமில்லையே எனக்கேட்டால்,

அதற்கான காரணம்: பள்ளி இல்லையாம்

பள்ளி மட்டும் தான் கற்பதற்க்கென்றால்,

காலையில் துயிலெழ, இறைத்தொழ, கடமைகளைச் செய்ய, இரவில் துயில்கொள்ள என அவன் தன்னொழுக்கம் கற்றுக்கொள்வது எப்போது?

பள்ளி மட்டும் தான் கற்பதற்க்கென்றால்,

பிறரோடு அன்பால் பேசிப்பழக, கூடிவிளையாட, குடும்பத்தில் உறவாட  என உள்ளப் பாங்களை கற்றுக்கொள்வது எப்போது?

பள்ளி மட்டும் தான் கற்பதற்க்கென்றால்,

இன்றைய தொழில்நுட்பக் கருவிகளை, தொலைச்சாதனப்  பொருட்களை நுட்பமாய் மட்டுமன்றி, பயனுள்ளதால், கால அளவையோடு பயன்படுத்த கற்றுக் கொள்வது எப்போது?

பள்ளிமட்டும் தான் கற்பதற்க்கென்றால்,

அறிவு சிந்தனைகளை பிறநூல்கள் வழியாய் அறிந்துகொள்ளும் வழக்கத்தை, தானறிந்த நல்ல சிந்தனைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை கற்றுக் கொள்வது எப்போது?

அன்பு பேரனே, பேத்தியே..

பள்ளிப் பாடங்கள் மட்டுமல்ல, அதிகாலை எழும் பழக்கம் முதல் அடுத்தவரிடம் அன்பாய் பழகிட, என நீ கற்கைக்கொள்ள நிறைய இருக்கிறது அதை செய், இப்பொது…..

 

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் SdC

உரோம்,இத்தாலி ...

Daily Program

Livesteam thumbnail