உலக மன இறுக்க நோய் விழிப்புணர்வு தினம் | April 2

        மன இறுக்கநோய் பற்றிய பொது விழிப்புயர்வை ஏற்பத்த உலக மனவிறுக்கநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐநா பொதுசபை 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் இதை ஏற்றுக்கொண்டது, 2008 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. இது ஐநாவின் ஏழு அதிகார்வப் பூர்வ உடல்நலம் சார்ந்த தினங்களில் ஒன்றாகும். மன இறுக்கக் கோளாறுடன் வாழும் மக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மன இறுக்கநோய் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் தேவையை  வலியுறுத்தவும், இதன் மூலம் அவர்கள் சமுதாயத்தின் ஓர் அங்கமாக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் இது கடைபிடிக்கப்படுகிறது. 
        இந்த நோய் ஓர் வளர்ச்சிக் கோளாறு. அது பிறந்த முதல் மூன்று ஆண்டுகளில் வெளிப்படுகிறது. இது மூளையைப் பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். சமுதாய உறவில் பாதிப்பு, பேச்சு அல்லது பேச்சற்ற தொடர்பு கொள்ளலில் பிரச்சனை, திரும்பத் திரும்ப ஒன்றுபோல் நடந்து கொள்ளுதல் மற்றும் ஆர்வங்களிலும் நடவடிக்கைகளிலும் குறைபாடு ஆகியவை இதன் இயல்புகள் ஆகும். இதற்கான காரணங்கள் தெரியவில்லை. இது மரபியல் அல்லது சூழல் காரணிகள் சம்பந்தப்பட்டது என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இது குணம் அடைவதில்லை. மொழிப்பயிற்சி, வேலைத்திறன் பயிற்சி, கல்வி பயிற்றல், மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கும் பொற்றோருக்கும் துணைபுரியும்.