சர்வதேச இரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் | June 10
 
  சர்வதேச இரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்
   
 சர்வதேச இரயில்வே லெவல் கிராஸிங் விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. லெவல் கிராசிங் என்பது சாலையும், இரயில் பாதையையும் இணையும் சந்திப்பு ஆகும். ஓடும் இரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்துவது சாத்தியம் இல்லாததால், சாலையில் செல்லும் வாகனங்கள் நின்று செல்லும் வகையில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் இரும்பு கேட்டுகள் அமைக்கப்படுகின்றன.     இரயில்கள் வேகமாக இயக்கப் படுவதால் இரயில்வே லெவல் கிராசிங்கேட்டுகளில் கடக்கும் வாகன ஓட்டுநர்கள் பொறுமையுடன் செயல்பட்டு கேட்டை திறந்த பின் சென்று விபத்துகளை தவிர்க்க உதவ வேண்டும். இவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சர்வதேச அளவில் இந்த விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.
    இந்தியாவில் இரயில் பாதையில் அத்துமீறி நுழைவது கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும் 147 இரயில்வே சட்டம், 1989 பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படுவார். இது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
Daily Program
 
 
             
     
 
   
   
   
   
  