பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள்| veritastamil

பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள்
புனித வியாழன் என்று அழைக்கப்படும் கட்டளை வியாழன் இயேசு தம் சீடரோடு அமர்ந்து இறுதி இராவுணவு அருந்திய நாள். இதில் முத்தாய்ப்பாய் அமைவது ஆண்டவர் இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வு. அடிமைகள் அரசரின் பாதங்களைக் கழுவ வேண்டும் என்கிற கோட்பாட்டை உடைத்தெறிந்துவிட்டு அரசர்க்கெல்லாம் அரசரான இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் தாழ்ச்சியின் முழுவுருவாய் விளங்குகிறார். நம்மையும் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ அழைக்கிறார் . இதை நினைவு கூறும் வகையில்
சாந்தோம் புனித தோமையார் திருத்தலத்தில் புனித வியாழன் அன்று சென்னை மயிலை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் பணிவிடை பெற அல்ல பணிவிடை புரியவே என்ற இயேசுவின் வார்த்தைக்கு இணங்க ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு பாதங்களை கழுவினார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலில் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்தார் திருத்தந்தையின் செயலால் ஈர்க்கப்பட்ட பேராயர் அவர்கள் பன்னிரண்டு ஆண்களின் பாதங்களை கழுவும் பாரம்பரிய நடைமுறையை உடைத்து. பேராயர் மனநல சவால்கள் கொண்ட மூன்று நபர்கள், இரண்டு உடல் சவால்கள் கொண்டவர்கள், ஒரு பார்வையற்ற நபர், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள், 12 வயது குழந்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது தாயை இழந்தவர், மற்றும் மூன்றாம் பாலின உறுப்பினர். என்று பன்னிரண்டு நபர்களின் பாதங்களை கழுவினார்
பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தனது மறையுரையிலே பாதங்களை கழுவும் சடங்கின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை விளக்கிய பேராயர், யூத பாரம்பரியத்தில், அடிமைகள் விருந்தினர்களின் பாதங்களை கழுவினார்கள் . இன்று, நம்பிக்கையாளர்களின் பாதங்களை கழுவும் அருட்தந்தையர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறார்" என்று அவர் கூறினார். "கிறிஸ்துவில், யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஓரங்களில் இருப்பவர்கள் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். கடவுளின் குடும்பத்திற்குள் மற்றவர்களை வரவேற்கும் தாழ்மையான ஊழியர்களாக இருக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம் ".என்று கூறினார்
இயேசுவுடன் இத்தகைய நெருக்கமான தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ள நம்பிக்கையாளர்களை ஊக்குவித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், கிறிஸ்துவின் இயல்பை பிரதிபலிக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்றார். திருத்தந்தை பிரான்சிஸை மேற்கோள் காட்டி..! "ஒரு குருவானவர் குருமடத்தில் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, உண்மையான உருவாக்கம் குடும்பத்தில் தொடங்குகிறது" என்று குருத்துவதை முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.
Daily Program
