தியாகம் | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

தியாகம் என்னும் செடியில் பூக்கும் மலரே அன்பு.
தியாகமின்றி அன்பு இல்லை; அன்பில்லாமல் யார்தான் தியாகம் செய்ய முன் 
வருவார்?!

நாளைய மகிழ்வான வாழ்வுக்காக இன்றைய நாளைத் தியாகம் செய்வோர் பலர். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகத் தங்கள் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோரைத் தான் எப்படிப் போற்றுவது?!

வெற்றி பெறுவது எளிதான ஒன்றென்றால், எல்லாரும் வெற்றி பெறுவார் அன்றோ? தியாகமே வெற்றியின் வித்தென்பதை நீவிர் அறியீரோ?!

நீர் விரும்பும் ஒன்றை அடையத் தியாகம் செய்யத் தயங்கினால், நீர் விரும்பியதையே, தியாகம் செய்ய வேண்டியிருக்கும்அன்றோ?!

பலருடைய தியாகத்தின் பரிசே நம் நாடு பெற்ற சுதந்திரம்.  விலைமதிப்பற்றத் தியாகத்தை எந்நாளும் மதிப்போம்!

வாழ்க வளமுடன் நலமுடன்