சிட்டுக் குருவியின் வீடு | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மனிதர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த சிட்டுக்குருவி ற்போது அழிந்துவரும் பறவையினங்களில் ஒன்றாகி விட்டது. இதனால் ட்டுக்குருவியின் இனத்தைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை பற்கொள்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். அவர்களுள் புதுச்சேரி அரண் நம் நினைவுக்கு வருகிறார். இயற்கையின்மீதும் சிட்டுக் கருவிகளின்மீதும் ஆர்வம்கொண்ட இவர், சிட்டுக்குருவிகளைப் மதுகாக்கத் தன் சொந்தச் செலவில் 800க்கும் அதிகமாக இலவசக் கூண்டுகளை வழங்கியுள்ளார்.

சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பது பற்றி அருண் பேசுகின்றபோது, தனியார் கிளினிக்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே பறவைகள், இயற்கையின்மீது எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. வீட்டில் பறவைகளுக்குத் தானியமும் தண்ணீரையும் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கொசப்பாளையம் பகுதியில் நிறைய மரங்கள் இருந்ததால் சிட்டுக்குருவிகள் அதிகம் வந்துசெல்வதைச் சிறுவயதிலே பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவற்றைப் பார்ப்பது அரிதாகிப் போய்விட்டது. அலைபேசிக் கோபுரங்கள், மரங்களை அழிப்பது, இயற்கைக்கு ஊறு விளைவிப்பது போன்ற பல்வேறு காரணங்களில் சிட்டுக்குருவிகளின் இனம் அழிந்துகொண்டு செல்வது மிகவும் வேதனைக்குரியது” என ஆதங்கப்படுகிறார் இவர்.

சிட்டுக் குருவிகளுக்கும் ஏதேனும் செய்யவேண்டும் என யோசித்த அருண் சிறிய கூண்டுகளைத் தயாரித்து வழங்கத் தொடங்கினார். 2014ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய சேவை இன்றும் தொடர்கிறது. ஒரு கூண்டு செய்ய ₹ 130 செலவாகும் என்று கூறும் அருண் இதுவரை தமது சொந்தப் பணத்தில் சேமித்துதான் கூண்டுகளை மொத்தமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, டீக்கடை, பெட்டிக்கடைகளில் இருக்கும் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய செய்திகளை ஒட்டி, 'பறவைகள் வாழும் இடம் என்பதால் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பீர்' என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image