ஒரு ரூபாய் உணவகம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
ஒரு ரூபாய்க்கு எதை வாங்க முடியும் இந்த விலைவாசி மிகுந்த உலகில்? ஒரு ரூபாய்க்கு ஒருவேளை உணவு வாங்கி உண்டால், அது ஆச்சரியம்தானே! ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அருகில் T. M. V. ஹோம்லி உயர்தர சைவ உணவகம் ஒன்று உள்ளது. வெங்கட்ராமன் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய உணவகம் அது.
2007ஆம் ஆண்டு, ஒரு நாள் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தமது கணவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு காலை உணவுக்காக வெங்கட்ராமனின் உணவகத்திற்கு 10 ரூபாய்க்கு ஆறு இட்லி வாங்க வந்துள்ளார். இவர் வருகின்றபோது இட்லி தீர்ந்துபோயிற்று. பத்து ரூபாய்க்கு மூன்று தோசை வாங்க வெங்கட்ராமன் சொன்னபோது, அந்த மூதாட்டி உணவை வாங்க மறுத்துவிட்டார். காரணம் மூன்று தோசை அவர்கள் இருவருக்கும் போதுமானவையாக இல்லாததால்தான். இந்த உண்மையை அறிந்த வெங்கட்ராமன், அன்றே ஆறு தோசையை 10 ரூபாய்க்கு அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார். ஏன் ஏழை நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யக்கூடாது எனவும் யோசித்தார். அதன் பலனாக, ஒரு ரூபாய்க்கு இவர்களுக்கு உணவு வழங்கத் தீர்மானித்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக இவரின் சேவை தொடர்கிறது.
நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் புளிப்பு, காரம் இல்லாத நல்ல உணவை ஈரோடு அரசு மரு நோயாளிகள் வாங்கிப் பசியைப் போக்குகின்றார்கள். தினமும் காலை, மருத்துவமனைக்கு வருகின்ற ஏழை நண்பகல், மாலை என சுமார் அறுபது நோயாளிகள் இதனால் பயனடைகின்றனர். இதுமட்டுமன்றி தீபாவளி, பொங்கல் நேரங்களில் நோயாளிகளுக்குத் தன்னால் முடிந்தவரை துணிகள் எடுத்துக்கொடுத்து அவர்கள் மகிழ்விலும் பங்கெடுக்கிறார். இவரால் பயன்பெற்றவர்கள் இவரைக் கடவுளாகப் பார்க்கிறார்கள்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதாவது இந்தச் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தை சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வெங்கட்ராமன் ஏழை நோயாளிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
ஏழைகளுக்காகத் துன்பங்களைச் சந்திக்கின்றபோது, நமது துன்பத்திலும் யாரேனும் துணை நிற்பார்கள்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
