அன்புக்கு இறப்பு இல்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
குடும்ப வாழ்வு என்பது ஓர் அன்புப் பயணம். இரு உள்ளங்கள் இணைந்த கூட்டு வாழ்வு.
1959இல் தசரத் மான்ஜி அவர்களின் மனைவி ஃபால்குனி தேவி அவர்கள், சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறாததால் மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும் நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் பயணம் செய்து வஜீரகஞ்ச் மருத்துவமனையை அடைய வேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள இயலாமல் ஃபால்குனி தேவி இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தசரத் மான்ஜி அவர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு நாளும் அந்தக் குன்றை ஓர் உளியையும், சுத்தியலையும் கொண்டு தகர்க்கத் தொடங்கினார். அந்தக் கிராமத்து மக்கள் பலரும் அவரை 'மதியிழந்தவர்', 'பைத்தியக்காரன்' என்று கேலி செய்தனர். இதற்கெல்லாம் மனந்தளராமல் 22 ஆண்டுகள் இடைவெளியின்றி அந்தக் குன்றைத் தகர்த்து ஓர் அழகான பாதை அமைத்தார். 1982ஆம் ஆண்டு அவர் அந்தப் பணியை முடித்தபோது குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதை உருவாகி இருந்தது. அவர் அமைத்த பாதையால் அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம் 80 கி. மீட்டரிலிருந்து 13 கி.மீட்டராகக் குறைந்தது. தற்போது அந்த மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைந்து வருகின்றார்கள்.
தன் சொந்த நலனையும் குடும்பத்தையும் மறந்து, ஊர் மக்களின் கேலிப்பேச்சுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 22 ஆண்டுகள், அதாவது 8000க்கும் அதிகமான நாள்கள் ஓர் உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைத் தகர்த்ததற்கு ஒரே காரணம் அவர் தன் மனைவிமீது கொண்டிருந்த ஆழமான அன்பு என்றால், அது மிகையாகாது. தமது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தசரத் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயின் தீவிரம் காரணமாக 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆ தின் உயிர் பிரிந்தது. இவரது உடல் அரசு மரியாதையுடன், பல நாள் தசரத்தின் உயி தலைவர்கள் பங்கேற்க அடக்கம் செய்யப்பட்டது.
மனித உடல் மாய்ந்தாலும் அவர்கள் செய்யும் அறப்பணி என்றும் அழிவதில்லை.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
