அப்பா...| அருட்சகோதரி பிரைடா SSAM | Veritas Tamil

அப்பா...

உம் முன்னால்
வார்த்தைகள் உயிரற்று போகின்றன;
மொழிகளும் ஊமையாகின்றன;
பயணங்களும் பாதியாகின்றன.

காரணம்...

கடின உழைப்புக்கு முதற்புள்ளி நீ;
தியாகத்திற்கு தலைமகன் நீ;
மொத்தத்தில்,
கடவுளின் வெளியடையாளம் நீ!

உன் உடனிருப்பு,
அகிலத்தையே வென்றுவிடலாம்
என்ற நம்பிக்கையைத் தருகிறது.

உன் விரல் பற்றி நடந்தபோது,
“நீதான் என் பாதை”
என்று அறிந்தேன்.

உன் தோள்களில் சாய்ந்து உறங்குவது
எனக்கு உலகின் இனிய சுகம்.

நீ காணாத உலகங்களைக்கூட
நான் காண வேண்டும் என்று நினைக்கும்
உன் பெருந்தன்மை,
என்னை எப்போதும் பிரமிப்படையச் செய்கிறது.

தளர்ந்த வயதிலும்,
உன் இதயம் எனக்காக மட்டுமே
துடிப்பதைப் பார்க்கும்போது,

உனக்கே நான் மீண்டும்
மகனாகவும் மகளாகவும் பிறக்க வேண்டும்
என்று என் இதயம் ஏங்குகிறது.

அப்பா...

உன் அன்பு ஒரு வரம்;
உன் தியாகம் ஒரு பாடம்;
உன் வாழ்வு ஒரு வழிகாட்டி.

உன் தந்தைப் பாசத்திற்கு
என்றும் என் வீரவணக்கம்!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

அப்பா...

உம் முன்னால்
வார்த்தைகள் உயிரற்று போகின்றன;
மொழிகளும் ஊமையாகின்றன;
பயணங்களும் பாதியாகின்றன.

காரணம்...

கடின உழைப்புக்கு முதற்புள்ளி நீ;
தியாகத்திற்கு தலைமகன் நீ;
மொத்தத்தில்,
கடவுளின் வெளியடையாளம் நீ!

உன் உடனிருப்பு,
அகிலத்தையே வென்றுவிடலாம்
என்ற நம்பிக்கையைத் தருகிறது.

உன் விரல் பற்றி நடந்தபோது,
“நீதான் என் பாதை”
என்று அறிந்தேன்.

உன் தோள்களில் சாய்ந்து உறங்குவது
எனக்கு உலகின் இனிய சுகம்.

நீ காணாத உலகங்களைக்கூட
நான் காண வேண்டும் என்று நினைக்கும்
உன் பெருந்தன்மை,
என்னை எப்போதும் பிரமிப்படையச் செய்கிறது.

தளர்ந்த வயதிலும்,
உன் இதயம் எனக்காக மட்டுமே
துடிப்பதைப் பார்க்கும்போது,

உனக்கே நான் மீண்டும்
மகனாகவும் மகளாகவும் பிறக்க வேண்டும்
என்று என் இதயம் ஏங்குகிறது.

அப்பா...

உன் அன்பு ஒரு வரம்;
உன் தியாகம் ஒரு பாடம்;
உன் வாழ்வு ஒரு வழிகாட்டி.

உன் தந்தைப் பாசத்திற்கு
என்றும் என் வீரவணக்கம்!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!