பெண்கள் நலமே ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளம்! | Dr. Ruby Kapilsram | Veritas tamil

ஒரு பெண்ணின் ஆரோக்கியம் என்பது மாதவிடாய் அல்லது கர்ப்பம் மட்டும் பற்றியது அல்ல. குழந்தைப் பருவம் முதல் menopause வரை, ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது.
Philippines நாட்டில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய சில முக்கியமான தொற்றுநோய்களும் உள்ளன. குறிப்பாக Dengue, Tuberculosis, Leptospirosis, Schistosomiasis மற்றும் சில mosquito-borne infections போன்றவை முக்கியமானவை. குறிப்பாக மழைக்காலத்தில் இந்தத் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், தங்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
அதேபோல், பெண்களின் reproductive health-ல் HPV infection மற்றும் cervical cancer prevention மிகவும் முக்கியமானது. சரியான வயதில் HPV vaccination மற்றும் வழக்கமான cervical cancer screening மூலம் பல பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

Fertility – பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
Fertility பற்றியும் சில முக்கியமான விஷயங்களைப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாதவிடாய் சீராக இல்லாதது, PCOS, thyroid problems, endometriosis, fibroids, ovarian reserve குறைதல், tubal problems போன்ற பல காரணங்கள் fertility-ஐ பாதிக்கலாம்.
பெண்களின் fertility-யில் வயதும் ஒரு முக்கியமான காரணியாகும். குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு egg quantity மற்றும் quality படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஆனால் வயது மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலை, ovarian reserve, lifestyle மற்றும் reproductive history ஆகியவற்றையும் தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

 

Dr. Ruby Kapilsram

Obstetrician & Gynaecologist

Tamil Survey Popup Image