முகமூடி ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.02.2025
பன்முக உணர்வோடு என் எதிரே
வலம் வரும் மனிதர்களுக்கேற்ப
நானும் ஒவ்வொரு முகமூடியாய்
மாற்றி மாற்றி அணிந்து கொண்டேன்.
இறுதியில் என் முகம் தொலைத்து
என் உணர்வு தொலைத்து
என்னை நானே இன்று
தேடி அலைகிறேன்.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
மனிதர்களுக்காகவும்
அவர்களுக்கு பிடித்தது போல்
அவதாரம் எடுக்க தொடங்கினால்
நிச்சயமாக அதற்கு நமது
வாழ் நாட்கள் போதாது.
உங்கள் நிஜம் எதுவோ அதனோடே
தைரியமாக வலம் வாருங்கள்
மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக
உங்களுக்கு பொருந்தி போகாத
ஒரு முக மூடியை (உணர்வை) ஒருமுறை
மாட்டிக் கொண்டீர்களானால்.
இறுதி வரை நீங்கள் யாரென்பது
உங்களுக்கே மறந்து போக வைத்திடும்
சுய நலமிக்க சமுதாயம் இது.
உங்கள் உணர்வோடு பொருந்தி
போகாத ஒன்றை ஒருபோதும்
உங்களோடு திணித்து வைக்காதீர்கள்!
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி