இறையோடு தொடங்கும் நாள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.03.2024

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது

எப்பத்தான் என்னுடைய கஷ்டம் எல்லாம் நீங்க போகிறது

என் மீது உனக்கு கருணையே இல்லையா ஏன் இப்படி எல்லாம் சோதிக்கின்றாய்

நான் சொல்வது உன் காதில் கேட்கவில்லையா

இப்படி எல்லாம் இறைவனிடம் நேரடியாகவே கண்ணீர் மல்க கேட்போம்.

நிச்சயமாக இந்த கோரிக்கைகளை இறைவன் செவி சாய்த்துக்  கொண்டுதான் இருப்பான்.

நிச்சயமாக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய நிலையில் தான் இறைவன் இருக்கின்றான்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிவதில்லை.

மற்ற காலகட்டங்களில் இறைவனை உங்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எனக்குள் இருக்கும்.

நாம் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது நமக்கு ஆடம்பரம் மட்டுமே தெரிந்திருக்கும்.

நம்மைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்திருப்போம்.

இவற்றையெல்லாம் நமக்கு வாரி வழங்கிய இறைவனை நாம் நினைப்பதில்லை.

அந்த இறைவனுக்கு நன்றியாக இருப்பதில்லை.

இன்னும்  நாம் இறைவனை வணங்குவதும் இல்லை.

இறைவனுக்கு பிடித்தமான செயல்களை செய்வதும் இல்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இறைவன் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கவே இந்த கஷ்டமான சோதனைகளையும் தருகின்றான்.

சோதனைகள் வந்த பிறகுதான் இறைவனை நாம் நினைக்க ஆரம்பிக்கின்றோம்.

அவனிடம் அழுது மன்றாடி புலம்புகின்றோம்.

ஒரே ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நாம் நன்றாக இருக்கும் போது இறைவனை நினைத்திருக்க வேண்டும்.

நாம் கஷ்டப்படும் போது இறைவன் நம்மை நினைத்து இருப்பான்.

நமக்கான சோதனையை அகற்றி விடுவான்.

எல்லா நேரங்களிலும் இறைவனை நினைத்து இருப்பது நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும்.

கடினமான சூழல் வந்தாலும் கூட நம்மை விட்டு அது அகன்று விடும்.

என்றென்றும் இறையை போற்றுவோம்.

அனைவருக்கும் இறையருள் நிறைந்து இருக்கட்டும்.

மிக்க நன்றி.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளர்க.

 

சாமானியன்

ஞா சிங்கராயர் சாமி

கோவில்பட்டி

Comments

ஜான் ஜி கென்னடி (not verified), Mar 07 2024 - 12:18pm
வானையும், வாழ்க்கையையும் தொடும் வரிகளால் பனையப்பட்ட காவியம். மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏