கல்வி என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி திருத்தந்தை கருத்து !| Veritas Tamil
 
  'கல்வி என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி திருத்தந்தை கருத்து !
நம்பிக்கைக்கான புதிய பாதையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில், "Drawing New Maps of Hope" என்ற திருத்தூது மடலைத் திருத்தந்தை லியோ வெளியிட்டுள்ளார்.
"Gravissimum Educationis (The Importance of Education) என்ற உலகளாவிய கல்விக்கான உரிமையை உறுதிபடுத்தும் வத்திக்கான் கிறித்தவக் கவுன்சிலின் ஆவணம் வெளியிடப்பட்டு 60 ஆண்டுகள் கடந்துள்ள மடல் நிலையில் அதற்கான திருத்தூது வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திருத்தந்தை லியோ, "கல்வி என்பது வரையறுக்கப்பட்ட விதி அல்ல; ஒவ்வொரு உயிருள்ள பதில்களை வழங்கும் காலத்தின் கண்ணாடி"எனத் யுகத்தின் தேவைகளுக்கான தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை லியோ கருத்து!
உண்மை மற்றும் எழுப்புபவராகவும், விடுதலைக்கான ஏழைகளுக்கும் விருப்பத்தை ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் பணிபுரியும் தனித்துவமான கல்வி முறைகளைக் கொண்டவர்களாகவும், தம் கல்வியாளர்கள் இருக்கவேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
கல்வி என்பது எப்போதும் ஆசிரியர், மாணவர், குடும்பங்கள், நிர்வாகிகள், அருள்பணியாளர் மற்றும் குடிமைச் சமூகத்தார் என அனைவரும் பங்கேற்கும் ஒரு கூட்டு முயற்சி என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை அது ஆழ்ந்த மனிதநேயத்துடன் ஒன்றிணைந்த அறிவுசார் தேடலாக அமையவேண்டும் எனவும், உணர்வுப்பூர்வமான ஒன்றிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையில் அது புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மாணவர்களை முழு ஆளுமையுடன் உருவாக்க வேண்டும், அறிவை இதயத்துடனும் பகுத்தறிவுத் திறனுடனும் ஒருங்கிணைக்கவேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை லியோ, கத்தோலிக்கப் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், 
அறிவுசார் முறையில் மாணவர்களை வழிநடத்தி ஆதரிக்கும் இடங்களாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கற்பித்தல் என்பது நேரம், நம்பிக்கை, திறன், இரக்கத்தை வழங்கும் பணியாகவும், நீதியைக் கருணையுடன் இணைக்கும் பணியின் ஓர் அழைப்பாகவும் புரிந்து கொள்ளப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
இறுதியாக ,பயம் மற்றும் பிரிவினையால் குறிக்கப்பட்ட உலகில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், மக்கள் மற்றும் நாடுகளிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் கத்தோலிக்கக் கல்வி அமைய வேண்டும் எனவும் திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்
Daily Program
 
 
             
     
 
   
  