திருத்தந்தை அவர்களின் துருக்கி மற்றும் லெபனான் பயணம். | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் துருக்கி மற்றும் லெபனான் பயணம்.
திருத்தந்தை லியோ XIV அவர்கள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை மேற்கொள்ள உள்ள துருக்கி மற்றும் லெபனான் நாடுகளுக்கான திருத்தந்தை புனிதப் பயணங்களின் குறியீடுகள் மற்றும் முழக்கங்களை வத்திக்கான் செய்தியகம் வெளியிட்டது.

துருக்கிக்கான குறியீடும் முழக்கமும்
திருத்தந்தை முதலில் நிக்கேயக் கவுன்சிலின் 1700வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு துருக்கிக்கு செல்கிறார். அங்கு அவர் அங்காரா, இஸ்தான்புல், மற்றும் பழைய நிக்கேயா அமைந்த இஸ்னிக் நகரங்களையும் பார்வையிடுவார்.
இந்தப் பயணத்திற்கான குறியீடு ஒரு வட்ட வடிவத்திலுள்ளது. அதன் மையத்தில் தார்தனெல்ல்ஸ் பாலம் காட்டப்பட்டுள்ளது. அது ஆசியா மற்றும் ஐரோப்பா இணைப்பை குறிக்கும் நிலையில், மனிதர் மற்றும் இறைவனுக்கிடையிலான பாலமாகிய கிறிஸ்துவை குறிக்கிறது.
பாலத்தின் கீழ் அலைகள் வடிவில் நீரின் காட்சிகள் காணப்படுகின்றன — இது திருவிழா நீராட்டத்தையும், இஸ்னிக் ஏரியையும் நினைவூட்டுகிறது.
இந்த குறியீட்டிற்கான முழக்கம் பவுல் திருத்தூதரின் எபேசியர் எழுத்தில் இருந்து எடுத்தது:“ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை , ஒரே நீராட்டு.” ஆகும்.
இந்தப் பயணத்திற்கான முழக்கம்,“அமைதியாளர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”என்ற வசனம் மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது.
மேலும் லெபனானிய மக்களுக்கு ஆறுதல் அளிப்பதும், உரையாடல், ஒற்றுமை மற்றும் சமரசத்தை ஊக்குவிப்பதும் இது இந்தப் பயணத்தின் மையச் செய்தியாக அமைந்திருக்கிறது .