கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான ஆற்றல் வாய்ந்த கருவி திருத்தந்தை லியோ வலியுறுத்தல் ! | Veritas Tamil

கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான ஆற்றல் வாய்ந்த கருவி திருத்தந்தை லியோ வலியுறுத்தல்!

"தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்'
"தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு
சிறப்பு நிகழ்வுகளின் வரிசையில், ஒரு வார காலத் தொடர் நிகழ்வுகளாகக் கல்வியாளர்கள் மற்றும் மாணாக்கர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்து வருகிறார். அண்மையில் அவர்களைச் சந்தித்தபோது, 'உலகை மாற்றுவதற்கான மிக அழகான மற்றும் ஆற்றல் வாய்ந்த கருவிகளில் ஒன்று."கல்வி" என்றும், 'கல்வியின் மூலம் சிறந்த சமூகத்தைப் படைக்கப் பாடுபடவேண்டும்' என்றும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அண்மையில் புனிதர் பட்டம் பெற்ற இத்தாலிய மாணவர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாட்டியின் கூற்றுகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, "நம்பிக்கை இல்லாமல் வாழ்வது வாழ்கை அல்ல; அது அர்த்தமற்ற இருத்தல்" என்றும், "வாழ்க்கையை முழுமையாக வாழத் தைரியம் கொள்ளுங்கள்" என்றும் அறிவுறுத்தினார்.

ஃபேஷன்கள்,தோற்றங்கள் அல்லது விரைவான இன்பங்களில் நிறைவடையாமல், உயர்வான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். அதுவே, ஒரு சிறந்த சமூகத்தை எதிர்நோக்கித் திட்டமிட்டிருக்கும் இளைஞர்களின் விருப்பமாக இருப்பதால், சிகரங்களை நோக்கி முன்னேறவும், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழவும் வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர் கல்வியைப் பெறுபவர்கள் மட்டுமல்ல, அதன் கதாநாயகர்கள் என்பதை நினைவூட்டிய திருத்தந்தை. அனைவரும் உண்மை மற்றும் அமைதியின் சாட்சிகளாக மாறிடவும், உண்மையைத் தேடுவதிலும், அமைதியைக் கட்டியெழுப்புவதிலும், தங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

 மேலும், "அறிவு பகிரப்படும்போது வளர்கிறது; மேலும் மனங்களின் உரையாடல் மூலம்தான் உண்மையின் சுடர் எரிகிறது" என்று புனித ஜான் ஹென்றி நியூமனின் கூற்றையும் அவர்கள் மத்தியில் திருத்தந்தை லியோ நினைவுகூர்

Daily Program

Livesteam thumbnail