ஆயுள் வரை ஜனாதிபதி | Simon Bolivar
வட அமெரிக்கா ஒரு கண்டம். இதில் கனடா, U.S.A மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளன. வடஅமெரிக்காவின் மிகப்பெரிய நாடான உருவாகவும், சுதந்திரப்போரில் வெற்றி காணவும் வாஷிங்டன் பாடுபட்டார். அதேபோல் இன்னொரு கண்டமான தென்அமெரிக்காவின் விடுதலைக்கு வித்திட்டவர் சைமன் பொலிவார் எனலாம். இவர் 'தென் அமெரிக்க விடுதலைவீரர்' எனப் போற்றப்படுகிறவர். வடஅமெரிக்காவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் போல, தென் அமெரிக்காவில் ஸ்பெயின் ஆதிக்கம் அதிகம். அந்த ஆதிக்கத்திற்கு அடங்கிய பகுதி, பல நாடுகள் பொலிவாரின் முயற்சியால் விடுதலை பெற்றன.
தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிற்நதவர் இவர். இவர் கல்வி பெற்றது ஸ்பெயின் நாட்டில். இக்காலத்தில் தாய் நாட்டுப்பற்று இவருக்கு அதிகமாகியது. 1811இல் ஸ்பெயின் நாட்டில் இருந்து தாய்நாடு திரும்பியதும் ஸ்பெயின் நாட்டு ஆதிக்கம் ஒழிய போராடினார்.
முதலில் தோல்வியை இவர் சந்தித்தாலும், மனம்தளராது தொடர்ந்து இம்முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் வென்றார். நியூகிரானடா, வெனிசுலா ஆகிய இருநாடு களையும் இணைத்து 'கொலம்பியா' எனப் பெயரிட் டார். 1821இல் இதன் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.
இவரது தலைமையில் பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளும் பிறகு விடுதலை பெற்றன. 1825இல் பெரு நாட்டின் தென்பகுதி தனியாகப் பிரிந்தது. அப்பகுதிக்கு 'பொலிவியா' என இவர் நினைவால் பெயரிடப்பட்டது. இது தென் அமெரிக்காவின் மத்தியப்பகுதியில் உள்ளது. தற்போது இது ஒரு குடியரசு நாடாகும்.11 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பு கொண்டது. ஸ்பெயின் ஆதிக் கத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் இருந்தது இப்பகுதி. 1825இல் பொலிவியா சுதந்திரம் பெற்றது.
இவரது காலம் 1783-1830. விடுதலை வீரர் (The liberator) என்று வரலாற்றில் அழைக்கப்படும் பெருமை பெற்றவர் இவர். இவரால் ஐந்து தென்அமெரிக்க நாடுகள் விடுதலை பெற்றன.
இவர் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வசித்தவர். அங்கிருந்து, தீவிர நாட்டுப் பற்று காரணமாகவே வெனிசுலா திரும்பினார்.
ஜூலை 15,1811இல் சுதந்திரப் பிரகடனம் செய் தார். விடுதலை ராணுவத்தில் ஓர் அதிகாரியாகப் பணி செய்தார். 1813இல் தலைநகரை (Caracas) கைப் பற்றினார். எதிர்ப்புகளால் 1816இல் பின்வாங்கினார். இருந்தாலும் 1819இல் வெற்றிபெற்றார். வெனி சுலாவின் அதிபராக மாறினார். நியூகெரனடாவில் இருந்தும் ஸ்பானிஷ் ஆட்சியை இவர் அகற்றினார்.
ஆகஸ்ட் 30,1821இல் கொலம்பியாவிற்கும் இவரே ஜனாதிபதி ஆனார். பிச்சினிகா, ஈக்வடார் பகுதியை ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்து மீட்டார். இரண்டு ஆண்டுகள் இதற்காக, இவர் கடுமையாக யுத்தத்தில் ஈடுபட்டார்.
1825இல் பெரு நாட்டில் இருந்து, இவர் ஸ்பெயின் ஆட்சியை நீக்கினார்.
1826இல் பொலிவியாவைக் கைப்பற்றி 'ஆயுள் வரை ஜனாதிபதி' என அறிவித்தார்.
1826இல் பொலிவார் கொலம்பியா திரும்பினார். அங்கே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு பெற்றார். இந்த சமயத்தில் இவரது பணி, நோக்கம், செயல்பற்றிய விமர்சனக் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. 1828இல் சர்வாதிகாரியாய், எல்லா அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். இதனால் மக்கள் இவருக்கு எதிராகத் திரும்பினார். நவம்பர் 1829இல் வெனிசுலா, கொலம் பியாவில் இருந்து பிரிந்தது. இவர் பதவி விலகிடவும், ஓய்வு பெறவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
வளர்ச்சி - வீழ்ச்சி இரண்டுக்கும் இவர் அரசியல் வாழ்வு உதாரணமாக இருந்தது. மக்களின் தீவிர ஆதர வால், இவர் ஸ்பெயின் ஆட்சியை வீழ்த்தி, பல தென் அமெரிக்க நாடுகளுக்கு விடுதலை பெற்று தந்தார். இவரின் சர்வாதிகார போக்கு, பிறகு வீழ்ச்சிக்கு காரண மாயிற்று.
எது,எப்படியாயினும், தென் அமெரிக்க விடுதலை வீரர் இவர்தான் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.