உலக மூளைக்கட்டி நாள் | June 8

உலக மூளைக்கட்டி நாள்
    உலக மூளை கட்டி நாள் 2000 ஆண்டு முதல் ஜூன் 8 கடைபிடிக்கப்படுகிறது. சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
    முதல் முதலாக மூளை கட்டி நாள் ஜெர்மன் மூளைக்கட்டி சங்கத்தால் (புநசஅயn டீசயin வுரஅழரச யுளளழஉயைவழைn) கடைபிடிக்கப்பட்டது. உலக மூளை கட்டி நாள் இன்றைய நாளில் மூளை கட்டி நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வோம். பொதுவாக மூளைக்கட்டி என்றாலே மிகவும் பயப்படும் அளவில் தான் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நமக்கு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் மூளையில் உருவாகும் அனைத்து கட்டிகளும் மரணம் ஏற்படுத்த கூடியவை அல்ல. பல காரணங்களால் மூளையில் உருவாகும் கட்டிகளில் சிலபுற்றுநோய் கட்டிகளாக இருக்கும்.
    மூளைக்கட்டி எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் மூளைக்கட்டி பாதிப்பு இருந்திருந்தால் மரபு ரீதியாக அது வாரிசுகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. உடலுக்குத் தேவையற்ற உயிரணுக்களின் அதிக வளர்ச்சியே புற்றுநோய். மூளை பகுதியிலும் அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சி மூளை கட்டி வடிவத்தில் உருவாகிறது. மூளைக் கட்டி என்பது மூளையில் உள்ள உயிரணுக்களின் தேவையற்ற அல்லது அசாதாரண வளர்ச்சியாகும். இதில் தீங்கு விளைவிப்பது மற்றும் தீங்கற்றது என்ற இருவகை கட்டிகள் உருவாகின்றன. வளர்ச்சியின் தீவிரத்தின் அடிப்படையில், கட்டிகள் தீங்கற்ற கட்டிகள் (புற்றுநோயற்ற, மெதுவான வளர்ச்சி விகிதம், குணப்படுத்தக்கூடியவை) மற்றும் வீரியம் மிக்கவை என வகைப்படுத்தப்படுகின்றன.