ரசிக்கும் வெண்ணிலவு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.11.2024

முடியாதது  உன்னால் எதுவுமில்லையே
முயற்சி நீ செய்தால் தவறுமில்லையே
காலம் ஒருநாள் மாறும் பொறுத்திடு
வாழ்வில் வசந்தம் வீசும் உழைத்திடு

ஆசையில் பிறந்திடுமே வேட்கை
நம்பிக்கை தானே நம் வாழ்க்கை
உன்னால் எல்லாம் முடியும்
முயன்றால்  கையில் இமயம்

விதையில் ஊக்கத்தை விதைத்திடு
வியர்வை நீரை வரும்வரை காத்திடு
விளைந்ததும் வெற்றியில் மகிழ்ந்திடு

காலம் மாறிப்போகும்-நீ
கண்டகாட்சி மாறும்
விண்ணும் உன்னைவியக்கும்- நீ
விடாமுயற்சி நிறுத்தும் வரைக்கும்

வெண்ணிலவும் உன்னை ரசிக்கும்
விடியல் வாசல்வந்து திறக்கும்
விழித்திரு(ற)ந்தால் போதும்
தென்றல் வந்து மோதும்.

முடியும் என்று உன்னை நம்பு.

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா. 

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி.