ஒரு ஒத்தின்னியத்தில் கூட்டுவிளைவு - அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது | Asian Continental Synodal Assembly | Day 3


மூன்றாம் நாள் மற்றும் இறுதி நாளான இன்று, கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை குறித்த ஆசிய கண்டங்களின் சபையானது, கடந்த இரண்டு நாட்களைப் போலவே, “அட்சுமஸ் சான்க்டே ஸ்பிரிடஸ்” என்ற தூய ஆவியானவரின் செபத்துடன் தொடங்கப்பட்டது. 

இன்றைய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக பிலிப்பைன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் மற்றும் கலூக்கன் மறைமாவட்டத்தின் ஆயருமான, ஆயர் பாப்லோ டேவிட், திருமதி தெரோசா வூ, சீனா நாட்டின் பிராந்திய ஆயர்கள் மாநாட்டின் பிரதிநிதியாகவும், மற்றும் திருமதி ஸ்டெல்லா பட்டிலியா, ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் (FABC) இறையியல் தொடர்பாக, இறையியல் ஆணையம் மற்றும் கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பணிக்குழு உறுப்பினர், அனைவரும் பங்கேற்றனர். 
அனைவரும் தங்களுடைய மனதில் எழுந்த இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தையும் தங்களுடைய குழுக்களுடனும், பிரதிநிதிகளுடனும் பகிர்ந்து கொண்டனர். 
ஜீன் கிளவுட் கர்தினால் ஹோலெரிச் சேச, லக்சம்பேர்க்கின் பேராயர் மற்றும் ஆயர் மாமன்ற பேரவையின் பதினாராவது பொதுக்குழுவின் ரெலேட்டர் ஜெனரல் ஆகியோர் மூன்று விதமான காரியங்களை அடிக்கோடிட்டு காண்பித்து அனைத்து பிரதிநிதிகளுக்கும் உரையாற்றினார்.

முதலாவதாக, கார்தினால் ஹோலெரிச், இசைக்கருவியாக, பிரதிநிதிகளை உருவகமாக பயன்படுத்தினார். அதாவது ஒரு ஒத்தின்னியத்தை உருவாக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை விளக்கினார். மேலும் இது ஒரு அருவருப்பை ஏற்படுத்தும் இரைச்சலாக மாறாமல் இருக்க, தொடர்ந்து சிறந்த ஒழுக்கத்துடனும், மற்றவர்களுடன் (கருவிகளுடன்) இசையாகவும் மீண்டும், மீண்டும் செயல்பட வேண்டும். 

இரண்டாவதாக, கூட்டு ஒருங்கியக்கத் திருஅவைக்கு மனத்தாழ்மை தேவை என்று கர்தினால் ஹோலெரிச் வலியுறுத்தினார். மேலும் பணிவுடன் மட்டுமே இந்த பயணத்தில் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்றார்.

மூன்றாவதாக, கர்தினால் ஹோலெரிச், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை என்பது கிறிஸ்துவால் நற்செய்தியை அறிவிக்கவும், கடவுளின் அனைத்து மக்களுக்கும் தன்னலமற்ற சேவையாக இருக்கவும் பணிக்கப்பட்ட ஒரு ஆலயம் என்று வலியுறுத்தினார். 
அருட்பணி. கிளாரன்ஸ் தேவதாஸ், பகுத்தாய்வு மற்றும் வரைவு குழுவின் உறுப்பினர், இறுதி ஆவணத்தின் திருத்தப்பட்ட வரைவு கட்டமைப்பின் சில சிறப்பம்சங்களையும், பிரதிநிதிகள் பரிந்துரைத்த திருத்தங்களைச் சேர்ப்பதில் உள்ள செயல்முறைகளையும் வழங்கினார். மேலும் குழுக்களுக்குள்ளேயேயான ஆன்மீக உரையாடலுக்கான தயாரிப்பில், அனைத்து பிரதிநிகளையும் மௌனமாக சிந்திக்க அழைப்புவிடுத்தார். 
நண்பகல் அமர்வில், அனைத்து பிரதிநிதிகளும் இரண்டு கேள்விகளை அடிப்படையாக வைத்து சிந்திக்க அழைப்புவிடுக்கப்பட்டது. 
1. ஆசிய திருச்சபையின் கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையை மேம்படுத்த எத்தகைய திருச்சபை கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும்? 
2. பிரதிநிதிகள், அக்டோபர் 2023 அமர்வுக்கும் அக்டேபார் 2024 ஆம் ஆண்டு கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பற்றிய அமர்வுக்கும் இடையில் என்ன நடக்க வேண்டும் என்ற விரும்புகிறார்கள்? சிறிது நேர

மௌனம் மற்றும் செபத்திற்குப் பிறகு பிரதிநிதிகள் இறுதி ஆவணத்தின் இறுதி கட்டமைப்பில் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். 
இறுதி அறிக்கையில், ஆயர் பேரவையின் பொதுச்செயலாளர் மரியோ கார்தினல் கிரேச், மூன்று நாள் ஆசிய கண்ட ஆயர்கள் பேரவையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஆயர் பேரவையில் அவர்களின் பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களின் பங்களிப்புகளை உலகத்திருஅவை மறக்க முடியாது என்றும் உறுதியளித்தார். ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் (FABC) பொதுச்செயலாளர் பேராயர் கிகுச்சி, இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதிசெய்வதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை பதிவு செய்து இறுதியாக நன்றியுரை வழங்கினார். 

யாங்கூன் மறைமாவட்டத்தின் பேராயர் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் (FABC) தலைவரான சார்லஸ் மாங் கார்தினல் போ அவர்களால் நிறைவுத் திருப்பலியானது கொண்டாடப்பட்டது. பிரான்சிஸ் சேவியர் கிரியெங்சாக் கோவிட்வானிட், போங்காங் மறைமாவட்டத்தின் பேராயர், பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, எர்ணாகுளம்-அங்கமாலி (சீரோ-மலபார்) மறைமாவட்டத்தின் பேராயர் மற்றும் தென் கொரியாவின் சுவோன் ஆயர் மத்தியாஸ் ரி இயோங் - ஹீன் (லீ யோங்-ஹீன்) ஆகியோரால் இணைந்து சிறப்பிக்கப்பட்டது. 
கார்தினால் போ தன்னுடைய உரையில் கூட்டு ஒருங்கியக்கத் திரு அவைப் பயணம் ஒப்பீட்டளவில் இயேசுவின் வனாந்தரப் பயணத்தைப் போன்றது என்று வெளிப்படுத்தினார். இது ஒரு வகையான சவால், ஆனால் அனைவருக்கும் அவசியமானது. ஏனெனில் இது நற்செய்தியைக் கேட்பது, சிந்திப்பது மற்றும் பகுத்தறிவது ஆகியவற்றின் மூலம் திருச்சபைக்கு சிறப்பாக சாட்சியம் கொடுக்க உதவுகிறது. நாம் எதிர்கொள்ளும் சவால்களை, எதிர்கொள்ளும் அணுகுமுறையில், அணுகுமுறை மாற்றம் தேவை என்று கார்தினால் போ கூறினார். இந்த மனமாற்றத்திற்கான விளக்கத்தை சுருக்கமாக L.E.N.T. என்ற வார்த்தையின் மூலம் விளக்கினார்.  

L=Letting Go – விடுதல்;. இந்த ஒன்றாகப் பயணம் செய்வது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், அந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையாக இருந்து நம்மை தடுக்கும் அனைத்தையும் விட்டுவிடுவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் விட்டுவிடுதல் அல்லது உதிர்தல் நம்முடைய வளர்ச்சிக்கு ஒரு முன்நிபந்தனை. 

E= Encounter - சந்திப்பு. சீடத்துவத்தின் பாதையில் நாம் பயணம் செய்வது ஒரு குறிப்பிட்ட இலக்கை கொண்டுள்ளது. கிறிஸ்துவை சந்திப்பது என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “கலாச்சார சந்திப்பு” என்ற அழைப்பை நினைவூட்டுவதும் ஆகும். இயேசு செய்தது போல்” எளிமையான முறையில் வேலை செய்ய ஒரு அழைப்பு. அதாவது சாதாரண கண்களால் பார்ப்பது மட்டுமல்ல, மனக்கண்களால் காண வேண்டும் என்றும், சாதாரண காதுகளால் கேட்டுபது மட்டுமல்ல, காதுகளால் கவனிக்க வேண்டும், மக்களை கடந்து செல்வது மட்டுமல்ல, மாறாக அவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும், “ஏழைகள், என்ன அவமானம்” என்று மட்டும் செல்லாமல் மாறாக ஒருவரின் சுயத்தை இரக்கத்துடன் உணர்ந்து அவர்களோடு பயணிக்க வேண்டும். 

N= Neighborliness - அடுத்திருப்பவர்கள். நல்ல சமாரியனின் உவமை நம் அனைவருக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. எனது அண்டை வீட்டார் யார்? (காண்.லூக் 10:29). இறுதியில் வந்த அந்த அன்னியர் தான் இரக்கம் காட்டியவர். ஆசிய கண்டத்திலே நாங்கள் சிறுபான்மையினர், நாம்; சமூக, அரசியல் மற்றும் மதத்தின் அடிப்படையிலான பதட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  வாழ்கிறோம். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருந்தாலும், தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளக்கு உதவ அழைப்பு விடுக்கப்படுகிறோம். 

T= Transformation - உருமாற்றம். கார்தினால் போ அவர்கள் திருப்பாடல்களில் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டினார்: “கடவுளே, உமது ஆவியை அனுப்பி, பூமியின் முகத்தைப் புதுப்பியும்.” இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணத்தில், தூய ஆவியானவர் நமக்கு கூறுவதை கவனமுடன் செவிமடுக்க நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். ஏனென்றால், நாம் திருஅவையோடு ஒன்றாக இணைந்து பயணம் செய்து திருஅவையை புதுப்பிக்க வேண்டுமென்றால், நாம் தூய ஆவியானவருடைய சக்தியை உருமாற்றம் செய்து பயணிக்க வேண்டும். ஏனெனில் இது தனிப்பட்ட நபரால் செய்ய இயலாது. இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணத்தில் நாம் பயணிக்க வேண்டும் என்றால் கடவுளின் உருமாற்ற அருள் நமக்கு நிலையாக தேவைப்படுகிறது. 

திருப்பலியின் முடிவில், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை குழுவின் பன்னிரென்டு பிரதிநிதிகள் மெழுகுதிரிகளை ஏற்றி இந்த மூன்று நாட்களாக தாங்கள் செய்த கருத்து பரிமாற்ற செய்திகள் மற்றும் பதிவுகளை அடையாள காணிக்கைகளாக கொடுத்தனர்.

Add new comment

5 + 0 =