கூடாரத்தில் எப்போதும் அறை உள்ளது | Asian Continental Synodal Assembly | Day 1


ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவின் பேராயர் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு (FABC) பொதுச் செயலாளரான, பேராயர். டார்சிஸ்சோ ஏசோ கீக்குச்சி,(SVD)  தலைமையில் நற்கருணை கொண்டாட்டமானது, தூய ஆவியானவர் திருப்பலியாக நடைபெற்றது.  மேலும் விர்ஜிலியோ கார்தினால் டோ கார்மோ டா  சில்வா, டிலி பேராயர் மற்றும் லூயிஸ் கார்தினால் மேரி லிங் மங்கனேகோன், லாவோஸ் வியன்டியான் அப்போஸ்தலிக்க விகார் ஆகியோரும் திருப்பலியை இணைந்து சிறப்பித்தனர். 

பேராயர் கீக்குச்சி (SVD) தன்னுடைய மறையுரையில் ஆப்பிரிக்காவில் ஒரு மறைபோதகராக அவர் செயலாற்றிய பணிகளை தன்னுடைய அனுபவங்களாக பகிர்ந்து கொண்டார். அவர் தனது வாழ்வில் அனுபவித்த விரக்தி மற்றும் அலட்சிய சூழ்நிலையின் காரணமாக மனித உள்ளுணர்வுகளையும் மனித ஆன்மாவையும், நம்பிக்கை மற்றும் அன்பு போன்றவற்றை அழித்துவிடுகிறது என்றார். – கானா நாட்டு மக்களுக்கு வாழ்வையும், மகிழ்ச்சியையும் கொடுப்பது ஒற்றுமை உணர்வு மட்டுமே என்று கூறுகிறார்.  
ஓவ்வொரு குழுக்களையும் வழிநடத்துபவர்கள் கரங்களிலும் மெழுகுதிரிகள் கொடுக்கப்பட்டது. அது மேஜையின் மீது வைக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட பின் திருப்பலியானது நிறைவுபெற்றது. இந்த மெழுகுதிரியானது கிறிஸ்துவின் ஒளியாக அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களுடைய கலந்துரையாடலின் போது இந்த ஒளி அவர்களை ஆழ்ந்து சிந்தித்து, விவாதித்து இந்த கூட்டு ஒருங்கியக்க திருஅவை பயணத்தை வழிநடத்த உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது.  

கூட்டு ஒருங்கியக்க செயலகத்தின் பொதுச் செயலாளர் மரியோ கார்தினால்; க்ரெச்,  தன்னுடைய தொடக்க உரையில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் நினைவூட்டியது என்னவென்றால், “இந்த கூட்டு ஒருங்கியக் திருஅவையில் நாம் அனைவரும் கற்றுக் கொள்கிறோம்” – திரு அவையில் உள்ள அனைவரின் குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், முக்கியமாக குரல்கள் கேட்கப்படாதவர்களுக்கும் மாற்றும் இதுவரை பேசாதவர்களுக்கும்; முக்கியத்துவம் கொடுத்தல்.   கார்தினால் க்ரெச் வலியுறுத்துவது “கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை என்பது செவிமடுக்கும் திருஅவை” மற்றும் ஆர்வத்தோடு முழுமையாக திருஅவையில் பங்கேற்கும் மக்கள் மற்றும் குருக்கள் (கடவுளின் மக்களில் அங்கம் வகிக்கும்) இவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு வெற்றிக்கு வழிவகுக்கிறது என்று வலியுறுத்தினார். மேலும் இந்த கூட்டு ஒருங்கியக்க திருஅவையின் முறையான பயிற்சியானது மக்களையும், அருட்பணியாளர்களையும் ஒருபோதும் போட்டிகளுக்கு உட்படுத்தாது, ஆனால் அவர்களை நிலையான உறவில் பராமரிக்கிறது, இருவரும் தங்கள் சொந்த கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற அனுமதிக்கிறது. கார்தினால் க்ரேச், “ஆலயங்களில் கலந்தாலோசிப்பது, கிறிஸ்துவின் இறைவாக்கினர் என்ற செயல்பாட்டில் பங்கேற்பதற்கான சரியான வழியை கடவுளின் மக்களுக்கு செயல்படுத்த உதவுகிறது. இறுதியாக கர்தினால் கிரோச் செவிமடுக்கும் திருஅவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். திருஅவையில் பேசும் தூய ஆவியானவர் சொல்வதைக் கேட்பது மற்றும் “கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை ஒரு செவிமடுக்கும் திருஅவை” என்ற சொற்றொடரை ஒரு சொல்லாட்சி சொற்றொடராக குறைக்காமல் அது உண்மை என்பதை உணரவைக்க வேண்டும். கார்தினால் கிரோச,; உயிர்த்த இறைவனின் தூய ஆவி  அனைத்து பிரதிநிதிகளையும் தூய ஆவியால் நிரப்பி, அவர்களை கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையில் பயணிக்க வைக்கவும், இந்த பயணம் மூன்றாம் மில்லினியத்தின் திருஅவையை திறக்கும் ஒரு மாற்றுப் பாதையாக அமையும் என்று வலியுறுத்தினார். 

திருமதி கிறிஸ்டினா கெங், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை மன்றத்திற்கான முறைமை ஆணையத்தைச் சேர்ந்தவர், இதுவரையிலான கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணம் குறித்த தன்னுடைய நுண்ணறிவுகளை வழங்கினார். ஆயத்த ஆவணம் 32ன் அடிப்படையில், இதில் கலந்துகொள்ளும் அனைவரும் ஒரு பங்கேற்பாளராகவே இருப்பார்களே தவிர, துணை நிற்பவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தினார். மேலும் கிறிஸ்டினா கெங் வலியுறுத்திக் கூறியதாவது: இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையின் நோக்கம் ஆவணங்களை தயாரிப்பது மட்டுமல்ல, மாறாக, கனவுகளை விதைப்பதும், தீர்க்கதரிசனங்கள் மற்றும் எதிர்கால சிந்தனைகளை முன்வைப்பது, நம்பிக்கையை தளிர்க்க வைப்பது, நம்பிக்கையை தூண்டுவது, காயங்களை குணப்படுத்துவது, உறவுகளை வலுப்படுத்துவது, நம்பிக்கையை தூண்டி எழுப்புவது, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வது, அது மனதையும், அன்பான இதயங்களையும் நம் கரங்களுக்கு பலம் அளிக்கும் ஒரு பிரகாசமான வளத்தை உருவாக்குங்கள். வெறுமனே ஒரு ஆவணத்தை உருவாக்க பங்கேற்பாளர்கள் தேவையில்லை மாறாக, ஒருவரையொருவர் சந்திக்கவும், கலந்துரையாடவும்,  உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், ஒரு விவேகமான சமூகமாக வளருவதற்கும் ஆசியாவில் கடவுளின் மக்களாக தூய ஆவியின் தூண்டுதலால் ஒரே சமூகமாக நடப்பதற்கும் தேவை என்று வலியுறுத்தினார். 

கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையானது ஒரு பிரதிபலிப்பு செயல்முறையாக இருப்பதால், பிரதிநிதிகள் பகுத்தறிவின் ஆன்மீகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர். அருட்பணி. அந்தோனி ஜேமஸ்; கோர்கோரன் சேச,  கிர்கிஸ்தானின் அப்போஸ்தலிக்க நிர்வாகி; பகுத்தறிவு என்பது தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒரு பயணம், இறக்கும் ஒரு எழுச்சி மற்றும் அது ஒருவரின் சொந்த திட்டங்கள், உறுதிப்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை விட்டுவிடுவது மற்றும் கணிக்க முடியாத வழிகாட்டுதல்களால் புதிய வாழ்க்கைக்கு தன்னை வழிநடத்த அனுமதிப்பது என்பதை அருட்பணி. அந்தோனி அனைத்து பிரதிநிதிகளக்கும் தெளிவுபடுத்தினார். இறையாட்சியின் பலன் என்ன என்பதை தெளிவுபடுத்துவது பொருத்தமானது மற்றும் கடவுளின் திட்டத்திற்கு தீங்கு விளைவிப்பது என்ன? என்ற எவாஞ்சலி கௌதியும் எண் 5, ( நுஎயபெநடii புயரனரைஅ n. 51) மேற்கோள்காட்டினார். 
அருட்பணி. கிளாரன்ஸ் தேவதாஸ், வரைவு கட்டமைப்பை உருவாக்க, ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு (FABC) பணிக்குழு மேற்கொண்ட செயல்முறை மற்றும் பயணத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அருட்பணி. கிளாரன்ஸ் தன்னுடைய விரிவுரையில், வரைவு கட்டமைப்பானது ஒரு திறந்த முடிவு கொண்ட வேலை என்பதை எடுத்துக்காட்டினார். பின்னர் பிரதிநிதிகள் அனைவரையும் செபத்தின் மூலம் ஒன்றாக பயணிக்க உதவுவதற்காக வரையப்பட்டதைக் கண்டறிந்து, விவாதிக்க மற்றும் செயலாக்கப்படுத்த வேண்டும் என்றார். தன்னுடைய உரையில் ஐந்து முக்கியமான காரியங்களை மேற்கோள் காட்டினார்:
 1. ஆசிய அதிர்வுள், 
2. ஆசிய பதட்டங்கள், 
3. ஆசிய உண்மைகள் மற்றும் வேறுபாடுகள், 
4. ஆசிய பதில்களில் அடையாளம் காணப்பட்ட இடைவெளிகள், 
5. ஆசிய பதில்களில் இருந்து முன்னுரிமைகள். 

வரைவு கட்டமைப்பானது பகுத்தறிவு செயல்முறையைத் தூண்டுவதாகும் இதன் மூலம் இறுதி முடிவு ஆசியாக் கண்டத்தில் எதிரொலிக்கும் கனவு, நம்பிக்கைகள், குறிக்கோள்கள் மற்றும் வலிகளை உண்மையிலேயே பிரதிபலிக்கும் என்று அருட்பணி. கிளாரன்ஸ் வலியுறுத்தினார். 
ஹாங்காங் நாட்டு ஆயர், ஸ்டீபன் சௌ. சேச, கண்ட நிலைக்கான கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பணிக்குழு உறுப்பினர் திருமதி சூசன் பாஸ்கோ மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பங்கேற்பாளாராக ஜாய் கேண்டலேரியோ ஆகியோர் அன்றைய ஏற்பாட்டாளர்களாக இருந்தனர்.

பிரதிநிதிகள் மூன்று கேள்விகளை அடிப்படையாக வைத்து தியானம், தனிப்பட்ட செபம் செய்தனர். அவை, 
1. கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை செயல்முறையின் அனுபவம் என்ன?
2. இந்தக் கூட்டத்தில் தங்களின் சிறப்புப் பணியாக எதைப் பார்க்கிறார்கள்? 
3. ஆன்மீக உரையாடலின் செயல்முறைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

மதிய உணவிற்குப் பிறகு அனைத்து பிரதிநிதிகளும் குழுக்களாகச் சந்தித்து, கலந்துரையாடல் செய்து தங்களுடைய சிந்தனைகள் அனைத்தையும் முழுமையான அறிக்கையாக தயாரித்து கொடுத்தார்கள். 

Add new comment

1 + 0 =