திருஅவையில் ஒரு வழிகாட்டல் - ஆசிய கூட்டு ஒருங்கியக்கம் | Synod on Synodality


வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை பாங்காக் உயர்மறைமாவட்டத்தில் உள்ள பான் பு வான் (விதைப்பவரின் வீடு), மேக்னிபிசியன்ட் மறைப்பணி பயிற்சி மையத்தில், கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை குறித்த ஆசிய கண்ட பேரவையானது நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆயர்களின் மாநாடு சார்பாக 17 ஆயர்களும் மற்றும் கூட்டு ஒருங்கியக்க ஆயர்களின் சார்பாக 2 ஆயர்களும், 29 நாடுகளின் பிரதிநிதிகளாக இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை பயணத்தில் 6 கர்தினால்களும், 5 பேராயர்களும், 18 ஆயர்களும், 28 குருவானவர்களும், 4 அருட்சகோதிரிகள் மற்றும் 19 பொது நிலையினரும் பங்கேற்று பயணிக்க உள்ளனர். 
 

அதிகமான மக்கள் தொகை கொண்ட ஆசிய கண்டம் பல்வேறு விதமான கலாச்சாரத்தினாலும், மொழியினாலும், மற்றும் மதத்தினாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் கிறித்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இச்சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளையும், செழுமையான கலாச்சாரம் வழியாக திருஅவைக்கு புத்துயிர் கொடுத்து வருகிறது. கிறித்தவர்களின் நம்பிக்கை, மதிப்பு மற்றும் அரும்அடையாளங்கள் ஒவ்வொரு இடத்திற்கு இடம் வேறுபட்டதாக இருந்தாலும் மனித சமூகத்தின் ஒன்றோடொன்று இணைந்திருப்பது அனைத்து ஆசிய மக்களையும் கவர்ந்து ஈர்க்கிறது. ஆசிய மக்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவுநிலை, சுயம், தனக்கு அடுத்து இருப்பவர் மற்றும் இந்த உலகம் என்று அனைவரையும் ஒரே குடும்பமாக நினைத்து செயல்படும் ஐக்கியத்தை ஆசிய மக்களிடையே கொண்டு வருகிறது. 
 

எத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையானது ஆசீர்வதிக்கப்பட்டதாக மற்றும் திருஅவைக்கு குணமளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது.  “திருஅவை கூடாரம்” இந்த உருவகமானது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் இடமாகவும், அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கும் இடமாகவும் விரிவுபடுத்தப்படுவதாகவும் வெளிக்காட்டுகிறது. இது வெளிப்படுத்துவது என்னவென்றால்  கடவுளின் ஆவி எங்கெல்லாம் வீசுகிறதோ அங்கெல்லாம் இந்தக் கூடாரம் அமைக்கப்படுகிறது. அதாவது வன்முறை, அமைதியின்மை மற்றும் துன்ப நேரங்களில் பாதுகாக்கும் கூடாரமாக இருக்கிறது. மிக முக்கியமாக, கூடாரத்தில் அனைவருக்கும் ஒரு அறையானது கொடுக்கப்படும், யாரும் விலக்கப்படுவதில்லை, ஏனென்றால் இது அனைவருக்குமான வீடு. இந்த கூட்டு ஒருங்கியக்கத்தின் வழியாக அனைவருக்கும் ஒரு புனிதமான மற்றும் பாதுகாப்பான இடம் இந்தக் கூடாரத்தில் கொடுப்பட்டுள்ளது என்று உணர வைக்கிறது. 
“கூடாரம்” இந்த உருவகமானது, இயேசுவின் அவதாரத்தின் வழியாக தம்முடைய கூடாரத்தை நம்மிடையே அமைத்ததையும் நமக்கு நினைவூட்டுகிறது, எனவே இந்தக் கூடாரம் நமக்கும் கடவுளுக்கும் இடையே சந்திப்பை ஏற்படுத்தும் கூடாரமாக அமைகிறது. இந்தக் கூடாரம் இப்போது நமக்கு ஒரு பொதுவான வீடாகக் காணப்படுகிறது, அத்தோடு இது நம்முடையது என்ற உணர்வு மற்றும் பொதுவான திருமுழுக்கில் பங்கொள்ளச் செய்கிறது. இந்த கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை செயல்முறை, நம்மிடையே ஒன்றாக இணைந்து நடப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதாவது சமூகங்களின் ஒற்றுமை, திருச்சபையின் கரிம வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. 

 

இங்கு பங்கேற்கும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் செபத்தின் மூலம் உறுதிபடுத்தவும், பகுத்தறிந்து விவாதிக்கவும், இந்த வரைவு கட்டமைப்பானது உதவுகிறது. அடுத்து வருகின்ற மூன்று நாட்களிலும் அனைத்து பிரதிநிதிகளும் தங்களுடைய மகிழ்ச்சியான அனுபவங்கள், இணைந்து பயணித்தல், காயப்பட்ட அனுபவங்கள் மற்றும் புதிய பாதைகளைத் தழுவுவதற்கான அழைப்புகளையும் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் ஆசிய வாழும் கூட்டு ஒருங்கியக்கத் திருஅவையில் ஏற்படும் பதட்டங்கள் குறித்தும், ஆக்கப்பூர்வமான முடிவுகள், குருத்துவ அழைத்தல், இளைஞர்கள், ஏழைகள், மத மோதல்கள் மற்றும் மதக்குருத்துவம் குறித்தும் விவாதிக்க உள்ளனர். 
 

ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவின் பேராயர் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு (FABC) பொதுச் செயலாளரான, பேராயர். டார்சிஸ்சோ ஏசோ கீக்குச்சி,SVD  தலைமையில் தூய ஆவியானவர் திருப்பலியானது தொடக்கத்தில் நடைபெறும். இதைத்தொடர்ந்து அனைத்து பிரதிநிதிகளையும் அறிமுகப்படுத்தும் நோக்குநிலை விவாதம் மற்றும் உறுதிப்பாடு என்ற தலைப்பில் நடைபெறும்;. இறுதி ஆவணமானது அங்கு வந்திருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பகிரப்பட்டு அவர்களின் எண்ணங்களும் கேட்டு அறியப்படும். 
 

ஆசியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கண்டத்தின் மக்களாக ஒன்றாக பயணிப்பதே நம்பிக்கை.  

 

Add new comment

3 + 10 =