அன்னையர் தினத்தில் ஆசி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் | வேரித்தாஸ் செய்திகள்


அன்னையர் தினத்தன்று,  அனைத்து  அன்னையர்களையும் இயேசுவின் தாயான கன்னி மரியாவிடம் ஒப்படைத்து  இறைவனின் ஆசிரை பெற்று தந்துள்ளார்   திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 14 அன்று  எப்போதும் ஆசி வழங்கும் திருத்தந்தையின் அறையின் ஜன்னலில் இருந்து பேசிய திருத்தந்தை  பிரான்சிஸ், புனித பேதுரு  சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரை அனைத்து  அன்னையர்களுக்கும் அவர்களது தியாகத்தை  கொண்டாட கைதட்டி பாராட்ட  கேட்டுக் கொண்டார்.

கடந்த ஞாயிறு அன்று அன்னையர் தினம்  பல நாடுகளில் கொண்டாடப்பட்டது  இன்னும் நம்முடன் இருப்பவர்கள், விண்ணகம் சென்றவர்கள் என்று அனைத்து அன்னையர்களையும் நன்றியுடனும் அன்புடனும் நினைவு கூர்ந்து  அவர்கள் அனைவரையும் நம் ஆண்டவர் இயேசுவின் தாயான அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று  என்று திருத்தந்தை கூறினார்.

மேலும் நீண்ட காலமாக  நடந்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் மற்றும் போராலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டு வரும்  அனைத்து நாடுகளின் துன்பத்தையும் தணிக்கும்படி நம் அன்னை வழியாக   கேட்டுக்கொள்கிறேன் என்று திருத்தந்தை  பிரான்சிஸ்  கூறினார்.

முக்கியமாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பல வருடங்களாக நடந்து வரும்  போர் நிறுத்தத்திற்காக அவர்  பிரார்த்தனை செய்தார். பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை என்பது போர் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருபோதும் பெறப்படுவதில்லை, அது மட்டுமின்றி  அமைதிக்கான ஒவ்வொரு வழியையும் இது அடைத்து கொண்டு வருகிறது இதனால் பல இழப்புகளை மட்டுமே சந்தித்து வருகிறோம் என்று திருத்தந்தை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நற்செய்தியை மேற்கோள் காட்டி மறையுரை  வழங்கிய திருத்தந்தை, தூய  ஆவியானவர் நமது வாழ்க்கைக்கு ஒரு நிலையான வாழ்க்கை துணையாக கருதப்பட வேண்டும் என்று கூறினார், அவர் கடவுளின் ஆறுதல், கருணை மற்றும் வலிமையைக் கொண்டு நமக்குள் செயலாற்றி வருகிறார்.

தூய  ஆவியானவர் நம்முடன் என்றும் தங்க விரும்புகிறார், அவர் நம்மை மரியாதை நிமித்தமாக சந்திக்க வரும் விருந்தாளி அல்ல மாறாக அவர் வாழ்க்கைக்கு ஒரு துணை, ஒரு நிலையான என்றும் மாறாதவர் . அவர் ஆவியானவர் மற்றும் நம் செயல்களில்  வாழ விரும்புகிறார். நாம்  பாவத்தில் விழுந்தாலும், அவரை விட்டு விலகி சென்றாலும் பொறுமையாக நமக்காக காத்து இருக்கிறார் கரணம் அவர் நம்மை உண்மையாக நேசிப்பதால் மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்  திரும்பி அவரிடம் வர வேண்டும் என்று  ஆவியின் கனிகளோடு காத்துக்கொண்டு  இருக்கிறார் என்றார்.

நாம்  எத்தனை முறை தூய  ஆவியானவரை அழைக்கிறோம் அவருக்கு உண்மையாக இருக்கிறோம்  என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தூய  ஆவியானவர் எப்பொழுதும் நமக்குள்ளேயே இருக்கிறார், நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும்  கேட்டுக்கொண்டார்.

நமக்கு சோதனைகள், துன்பங்கள் வரும்போதும் நாம் தூய ஆவியை மறந்து பாவம் செய்யும்போதும்  தூய ஆவியானவர் நமக்கு ஆறுதலளித்து, கடவுளின் மன்னிப்பையும் பெற்று தந்து நமக்கு தேவையான வலிமையையும் தருகிறார் என்று அவர் கூறினார்.

தூய ஆவியானவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய பிரசன்னத்தை  உணர்ந்து நம்பிக்கை மிக்கவராக இருப்பதற்கு அன்னை  மரியாவிடம் நாம் அவரின் உடன் இருப்பினையும் அன்னையின் அரவணைப்பையும் நாட வேண்டும்  என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

தூய ஆவியார் நமக்கு தரும் உன்னதமான ஒரு உடனிருப்பு நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதே, அவரோடு இணைந்து இருந்தால் இறைவனின் ஆசிரும் ஆவியானவரின் கனிகளும் என்றும் குறைவுபடாது என்று திருத்தந்தை கூறினார்.

_ அருள்பணி வி. ஜான்சன்

(News source from Catholic News Agency)

Add new comment

16 + 1 =