Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருத்தந்தை : ஒற்றுமையை 'உலகமயமாக்குங்குகள்,அலட்சியத்தை அல்ல | வேரித்தாஸ் செய்திகள்
இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான அவரின் உருவத்தில் என்ற (A Sua Imagine) நிகழ்ச்சியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை சனிக்கிழமையன்று பார்வையாளர்க்கள் நேரத்தில் சந்தித்த திருத்தந்தை , ஒற்றுமையை 'உலகமயமாக்க வேண்டும், அலட்சியத்தை அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
அவர் காட்டிய பாதையில் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன்: ஒற்றுமையே "உலகளாவிய" தேவை, அலட்சியம் அல்ல.
பலவீனமானவர்களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் குரல் கொடுப்பது என்பது இத்தாலியில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் வாழும் நற்செய்தியை அறிவித்து வாழ்பவர்களைப் பற்றி பேசுவதாகும் என்று அவர் அவர்களை ஊக்குவித்தார்.
ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலம் நேர்மறையான கருத்துக்களை மக்களிடம் இருந்து பெற முடியும் எதிர்மறை கருத்துக்களை யாரும் சொல்லிவிடக்கூடாது என்று நமக்கு நாமே ரேடார் கருவி கொண்டு அலசி ஆராயக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
பல மறை சாட்சிகளை அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவை அனுபவங்களுடன் முன்னிலைப்படுத்தியதற்காக திருத்தந்தை இந்த திட்டத்தை பாராட்டினார், மேலும் அவர்களின் சாட்சி "அர்ப்பணிப்பு மற்றும் மற்றவர்களுக்காக தங்களை செலவழிக்கும் திறன் கொண்ட இளைஞர்கள் இருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது."
மறைசாட்சிகளின் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் மனிதகுலத்தின் போராட்டங்களை நிரூபிக்கின்றன, வாழ்க்கையில் நற்செய்தியின் அழகைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதால் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
வாழ்க்கையின் கண்ணியம் மற்றும் புனிதம் பற்றிய செய்தியைப் பரப்புவதற்கு ஊழியர்களை ஊக்குவித்தார்.
மூவேளை செப வேளையின் போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது வேண்டுகோளை எதிரொலித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் "உங்கள் குறிப்பிட்ட பணியின் மூலம், இந்த விஷயத்தில் நீங்கள் நிறைய பங்களிக்க முடியும்" மற்றும் "இந்த வழியில் தொலைக்காட்சி பார்வையாளர்களை மறக்காமல் இருக்க உதவுகிறீர்கள், பிரார்த்தனையுடனும், உறுதியான உதவியுடனும், தினசரி அர்ப்பணிப்புடனும் அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்."
In His Image (A Sua Imagine) என்பது இத்தாலிய அரசு தொலைக்காட்சியான 'RAI' மற்றும் இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் கூட்டு முயற்சியாகும்.
இது மத உள்ளடக்கம், சமூக-அரசியல் உள்ளடக்கம் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய கத்தோலிக்க கண்ணோட்டத்தை வழங்குகிறது.
இந்த சேனல் திருத்தந்தையின் மூவேளை செபம் மற்றும் அவரது அப்போஸ்தலிக்க வருகைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
_ அருள்பணி வி.ஜான்சன்
(Source from RVA English News )
Add new comment