அரசமைப்பு தினம் | வேரித்தாஸ் செய்திகள்


அரசு  அமைப்பு தினத்தை முன்னிட்டு வான்முகில் எனும் தொண்டு நிறுவனம் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தில் உள்ள அதன் முகப்புரையை வாசித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை மாணவ மாணவிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசமைப்பு நாள் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பலவித முன்னெடுப்புகளை எடுத்துள்ளது இந்த தொண்டு நிறுவனம்.

முகப்புரையை உரக்க வாசிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவிய -  மாணவர்களுக்கு  ஓவியம் வரைதல் போட்டியும் ஆசிரியர்களுக்கு கட்டுரை எழுதுதல் மற்றும் வினாடி வினா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வான்முகில் அமைப்பின் அரசமைப்பு உரிமைக் கல்வித்திட்டத்தின் சார்பில் வருகிற நவம்பர் 26  அன்று அரசப்பமைப்பு சட்ட தினம் தமிழகத்தில் சிறப்பாக அனுசரிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 25 வெள்ளிக்கிழமை தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மாதாந்திர கூட்டத்தில் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் ஏறத்தாழ 8 இலட்சம் பெற்றோரும் , உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களில் முகப்புரை வாசிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் முகப்புரையை உரக்க வாசிப்பார்கள். மேலும் குடிமைச்சங்க அமைப்பினரும் இந்த முகப்புரையை உரக்க வாசிப்போம் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பங்கேற்பர். இதை ஒட்டி குழந்தைகள் ஆசிரியர்கள் அரசமைப்பு உரிமைக்கல்வி மன்ற நெறியாளர்கள் குழந்தைகள் மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பதற்க்கான வெவ்வேறு நிகழ்வுகளை வான்முகில் அமைப்பு நவம்பர் 25 மற்றும் 26  ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்து வருகிறது.இவற்றில் தங்களுக்கு பொருத்தமான நிகழ்வில் நீங்களும் பங்கேற்கலாம்.

தமிழகம் மற்றும் புதுவையில் செயல்படும் அனைத்துப்பள்ளிகளிலும் அரசமைப்பு முகப்புரையை பரவலாக எடுத்துசெல்லவும், நவம்பர் 25  ம் தேதி அன்று காலை 9  மணி அளவில் பள்ளி கூடுகையில் அரசமைப்பு தினத்தை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடும் விதமாக முகப்புரையை அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களும் கூட்டாக இணைந்து உரக்க வாசிக்க அன்புடன் அழைக்கிறது இந்த வான்முகில் அமைப்பு.

மாணவர்களுக்கு

மேலும் அரசமைப்பு உரிமைகளே எமது உயிர்மூச்சு என்ற தலைப்பில் தங்கள் பள்ளியில் அரசமைப்பு உரிமைக்கல்வி பயிலும் மாணவர்கள் ஓவியம் வரைவதை ஊக்குவிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் ஓவியம் வரைதலுக்காக நவம்பர் 25 அன்று ஏதேனும் ஒரு வகுப்பு நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

ஆசிரியர்களுக்கு

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு அரசமைப்பு உரிமைகளை வாழ்நெறியாக்குவோம் என்ற பொருளில் கட்டுரை எழுதும்படி பள்ளிகளில் ஆசிரியர்களை ஊக்குவிக்க அழைப்பு விடுத்துள்ளது இந்த அமைப்பு.

இந்த நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தேவைப்பட்டால் கீழ்காணும் தொடர்பு எண்களை அழைக்கலாம் .

ம.பிரிட்டோ

இயக்குனர், வான்முகில்

-9442618117

கா .கணேசன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

அரசமைப்பு உரிமைக்கல்வி

9994368503

க. பிரியா

மாநில துணை ஒருங்கிணைப்பாளர்

அரசமைப்பு உரிமை கல்வி

9994368523

 

வாருங்கள் இந்நிகழ்வில் இணைந்து பங்கேற்போம்

அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்

முகப்புரையை உரக்க வாசிப்போம்

 

Add new comment

11 + 0 =