ஆசிய திருஅவை சரியான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது | வேரித்தாஸ் செய்திகள்


கத்தோலிக்க திருஅவை உலகளாவியதாக இருக்க வேண்டும் என்று கூறிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக  பல ஆசிய கர்தினால்கள் நியமிக்கப்பட்டதன் மூலம் புதிய பாதையை உருவாக்குகிறார் என்று திருஅவையின்  உயர்மட்ட  தலைவர்கள் தெரிவித்தனர்.

 

திங்களன்று அக்டோபர் 25ம் தேதி அன்று  செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மும்பை கர்தினால் ஓஸ்வால்ட் கிரேசியஸ், கர்தினால்களை தேர்ந்தெடுப்பது திருத்தந்தையின் தனிப்பட்ட முடிவு என்றாலும், அவர் ஒரு உலகளாவிய" மேய்ப்பன் என்பதையும் இது காட்டுகிறது.

மேலும் இது ஆசிய திருஅவை அதன் சரியான இடத்தைப் பெறுவதற்கான அறிகுறியாகும்," இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்தினால்கள் பேரவையில் ஆசியர்கள் அதிகமாக நியமனம் செய்யப்பட்டவர்கள் பற்றிய CBCP செய்தி கேள்விக்கு கர்தினால்  கிரேசியாஸ் பதிலளித்தார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு பொது மாநாட்டின் 12வது நாளில் பாங்காக் பேராயர்களின் பான் பூ ஆயர் மையத்தில் செய்தியாளர் நிகழ்வு நடைபெற்றது.

திருஅவையை "சர்வதேசமயமாக்க" திருத்தந்தை விரும்புவதாகவும், "அந்த திருஅவை யூரோ சென்ட்ரிக் அல்ல ”அதாவது ஐரோப்பாவை மையமாக கொண்டது அல்ல  என்ற செய்தியை வழங்க விரும்புவதாக கிரேசியாஸ் சுட்டிக்காட்டினார். மேலும் திருத்தந்தை ஆசிய திருஅவையை மிக அதிகமாக நேசிக்கிறார் என்றும் கூறினார்.

யாங்கூன் கர்தினால் சார்லஸ் மாங் போ, தனது பங்கிற்கு, திருத்தந்தை உண்மையில் அடித்தட்டு மக்கள் மீதும் எளிய மக்கள் மீதும், அதிக கவனம் செலுத்துகிறார் என்றார்.

ஆசிய ஆயர் பேரவையின் தலைவர் ( FABC )பேசும்போது , "உலகத்தால் மறக்கப்பட்டவர்களில்" பெரும்பாலானோர் ஆசியாவை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது கவனம் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் மீது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்," என்று கார்டினல் போ கூறினார்.

இந்தியா, சிங்கப்பூர், கிழக்கு திமோர், தென் கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 21 புதிய கார்டினல்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்து உள்ளார்.

ஆசியாவைச் சேர்ந்த ஆறு புதிய கர்தினால்களுடன், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் ஆசிய பகுதியை சார்ந்த கார்டினல் வாக்காளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது- ஐந்து பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இருவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் மற்றும் மியான்மர், பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, ஜப்பான், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர். இலங்கை, ஈராக், இந்தோனேசியா, மங்கோலியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு திமோர்.

ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக, அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அதிக எண்ணிக்கையிலான கர்தினால்கள் வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது கண்டம் ஆசியா தான் என்பதும் இன்றுவரை, மாநாட்டில் பங்கேற்க தகுதியுடைய 132 கர்தினால்களில் 82 பேர் 85 வயதான நமது திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

-அருள்பணி. வி. ஜான்சன்

Add new comment

7 + 0 =