துளிர்விடும் உண்மைநிலவரங்கள் - நான்காம் நாள் | வேரித்தாஸ் செய்திகள்


செய்திக்குறிப்பு - 20 அக்டோபர் 2022

FABC பொது மாநாட்டின் நான்காம் நாள்  அக்டோபர் 20 ஆம் தேதி அன்று காலையில்  திருப்பலியுடன் தொடங்கியது, தைவானின் சிஞ்சுவின் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் லீ கே-மியன் பிரான்சிஸ்சேவியர் மற்றும் கர்தினால் கிரியெங்சாக் கோவிதவானிஜ் காலை அமர்வைத் தொடங்கி வைத்தனர்.

கார்டினல் க்ரீன்சாக் அன்றைய நாளுக்குரிய தலைப்புகளை அறிமுகப்படுத்தினார். கர்தினால் போ உரையாடும்போது தனது உரையில் அமைதி மற்றும் நல்லிணக்கம், புவிசார் அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள், பிற மத சகோதர உரையாடல் மற்றும் பிரிவினை சபை சகோதர உரையாடல் ஆகியவற்றுக்கான ஒரு உறவு பாலத்தை உருவாக்குதல் போன்ற முக்கியமான தேவைகள் பற்றி பேசினார்.

உயிர்வாழ அடிப்படையாய் இருப்பது அமைதியான வாழ்வு ஆனால் இன்றைய சூழலில் போர் நம் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. அமைதியான வாழ்விற்கு பலவிதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறோம்  என்று கூறிய கர்தினால் அமைதிக்கான தேவையை வலியுறுத்தினார்.  திருஅவை அமைதியின் தூதுவராக இருப்பதற்கும் , அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கவும் தயாராக இருக்கிறது. அமைதியை உருவாக்கும் நாமே புதிய நற்செய்தி என்று கூறி உலகி அமைதி ஏற்பட போராட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அவருக்கு அடுத்து பேசிய இறையியல் பேராசிரியரும் இணை இயக்குனருமான டாக்டர் எட்மண்ட் சியா ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் மதங்களுக்கு இடையிலான உரையாடல்,ஆசிய திருஅவை பயணத்தின் முக்கிய தருணங்களை எடுத்துக்காட்டிய அவர் தற்போதைய திருஅவை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை வலியுறுத்தி கூறிய அவர் ஒவ்வொரு நாட்டின் வரலாறு அது கடந்து வந்த பாதைகளை தெரிந்து கொள்வதும் அவசியம் என்று கூறினார். மேலும் பிற மதங்களில் இருக்கின்ற நல்ல விழுமியங்களை கற்றுக்கொள்ளும்போது அவற்றை பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது , எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஆசிய திருஅவை பலவற்றை கற்றுக்கொடுக்கும் கற்றலின் திருஅவையாக உள்ளது என்று டாக்டர் சியா பாராட்டினார்.

திரு லாரன்ஸ் சோங், சிங்கப்பூர் மறைமாவட்டத்தின் இணை நடுவர்  மற்றும் ஆயர் பேரவை மற்றும் மதங்களுக்கு இடையேயான துறையின் ஆலோசகர் இவர்கள் இருவரும் பேசும்போது குறிப்பாக இளைய சமுதாயத்திற்க்கு  ஒரு பாலமாக அவர்களை வழிநடத்திச்செல்லும் ஒரு நம்பிக்கைக்கு உரிய நண்பர்களாக திரு அவையின் உறுப்பினர்கள் மாற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இளைஞர்களின்  தனித்திறன், அவர்களின் ஈடுபாடு, மற்றும் அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் உரையாடலை உருவாக்க வேண்டும் என்று , திரு சோங் அனைவர்க்கும் அழைப்பு விடுத்தார்.

அமர்வைத் தொடர்ந்து முழுமையான குழு விவாதங்கள் ஒரு சுற்று நடைபெற்றது

விவாதம் நிறைவு பெற்ற பிறகு பேசிய  பேராசிரியர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ் இவர் ஒரு அரசியல் பொருளாதார பேராசிரியர்,மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் நிர்வாக உறுப்பினர் . இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு “இன்று ஆசியாவை இயக்கும் அரசியல் மற்றும் பொருளாதார போக்குகள்”

ஆசியாவின் அரசியல் வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை வழங்கிய பேராசிரியர் கோம்ஸ் அதிகாரபூர்வமான ஆட்சி, மக்கள் அதிகார இயக்கம் பற்றி விரிவாகக் கூறினார். ஜனநாயகம் மற்றும் உயர் தொழில்மயமாக்கலில் ஊழலின் விளைவுகள் தற்போதைய புவி-அரசியல் போராட்டங்களுக்கு சூழலை எவ்வாறு உருவாக்குகிறதுஅரசு யார்? மற்றும் ‘அதிகாரம் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விகளை எழுப்பிய அவர் திரு அவை மீண்டும் பிற மதங்களுக்கு இடையே ஒரு பாலமாக மாற வேண்டும் என்றும் மேலும் நாமும் நற்செய்திகளாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்த அமர்வு சூழலியல் பாதுகாப்பு , உணவு தட்டுப்பாட்டை குறைக்க முயற்சி ,மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பற்றி விவாதிக்க இவற்றின் துறைகளின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் நாம் அனைவரும் இணைந்து இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இந்த அமர்விற்கு கர்தினால் கிரியெங்சாக் தலைமை தாங்கினார்.

 

அருள்பணி .வி .ஜான்சன்

Add new comment

1 + 0 =